Search This Blog

Thursday, 12 December 2013

ஐஃபோன் & ஸ்மார்ட் ஃபோன் மூலம் அல்ட்ரா சவுண்ட்!




 மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன.


அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.


பெரும்பாலான நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை அடிப்படையாகக் கொண்டவை. சில காந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இயங்குகின்றன. இவைகளை தேவைக்கு தக்கபடி பயன்படுத்தி எல்லாவிதமான நோய்களையும் கண்டறிகிறோம்.


இந்நிலையில் கத்தாரில் நடைபெறும் குறைந்த விலை மருத்துவ சம்மிட்டில் நேற்றும் அமெரிக்காவின் பென்ஸில்வேனியா பல்கலைகழகமும், பால்டிமோர் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவகல்லூரி மாணவர்கள் சேர்ந்து சாதாரண ஐஃபோன் மற்றும் முக்கிய ஸ்மார்ட் ஃபோன் மூலம் ஒரு சாதனை படைத்து அசத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் உங்களின் ரத்த அழுத்தம் / ஹார்ட் ரேட் / இனிப்பு நீர் வியாதி / மற்றும் அல்ட்ரா சவுண்ட் எனப்படும் டெஸ்டிங் கூட எளிமையாய் நீங்கள் செய்து கொள்ள முடியும். அதிலும் இந்த டெக்னாலஜி வந்தால் தாய்மார்கள் எல்லோரும் தன் கர்ப்ப கால குழந்தையை ஒரு ரூபாய் செலவு இல்லாமல் வீட்டிலே தினமும் பார்த்து கொள்ள முடியும்.


இது பற்றி நான் மேலும் கூறுவதை விட மேலே உள்ள வீடியோ லிங்க்கை க்ளிக் பண்ணி பாருங்கள்.

No comments:

Post a Comment