Search This Blog

Sunday, 13 October 2013

சச்சினை கொண்டாட பத்து இணையதளங்கள்!.

எப்போது? எப்போது? என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்த‌து தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெற போவதாக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருகிறார்


24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு மட்டுமா, கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதும் தேசத்தில் அவரது சாதனைகள் ஏமாற்றங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளன.சச்சின் மைதானத்தில் சுடர்விட்ட நாட்களில் எல்லாம் நூறு கோடி மக்களை கொண்ட தேசமே தனனை மறந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிற‌து.

13 - sachin god

 


இந்திய கிரிக்கெட்டில் ,ஏன் உலக கிரிக்கெட்டில் வேறு எந்த வீரரையும் விட அதிகமாக சாதித்து அதைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்திய டெண்டுல்கரை கொண்டாடி மகிழும் வகையில் அவரைப்பற்றிய பத்து சிறந்த இணையதளங்களை இங்கே தொகுத்திருக்கிறோம.


1. சச்சின் வாக்கு.( http://www.brainyquote.com/quotes/authors/s/sachin_tendulkar.html)


எண்கள் தான் சச்சனுக்கு நெருக்கமானவை. டெஸ்ட்டிலும் ஒரு நாள் போட்டிகளிலும் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகளின் எண்ணிக்கை ,சச்சின் எனும் கிரிக்கெட் அற்புதத்துக்கு சாட்சி. ஆனால் சாதனைகளை விட வியப்பை ஏற்படுத்தும் விஷயம் சச்சினின் பணிவு.கிரிக்கெட்டில் அவருக்கு இருக்கும் ஈடுபாடு. சச்சினின் வார்த்தைகள் மூல்மே இவை பலமுறை வெளிப்பட்டுள்ளன. பல்வேறு பேட்டிகளில் சச்சின் கூறிய கருத்துக்கள் மேற்கோள்களாக புகழ் பெற்ற பிரைனிகோட்ஸ் தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு இந்த மேற்கோளை பாருங்கள்; “என் வாழ்க்கை முழுவதும்,பள்ளியில் கூட, நான் ஓடுவதற்கு யாரையும் வைத்து கொண்டது இல்லை, காரணம் பந்தை அடிக்கும் போது அது எத்தனை உறுதியாக் செல்லும் ,எங்கே செல்லும் என்று எனக்கு மட்டுமே தெரியும்,ஓடுபவருக்கு தெரியாது”. மேலும் பல சச்சொஇன் மொழிகளை இங்கே படித்து சச்சின் எனும் மனிதரின் மகத்துவத்தை வியந்து போற்றுங்கள்.


2. சச்சின் பற்றி ஒபாமா.


சச்சின் பற்றி பாராட்டாத கிரிக்கெட வீரர்கள்,விமரசகர்களே கிடையாது.மேத்யூ ஹைடன் “நான் கடவுளை பார்த்திருக்கிறேன் அவர் இந்திய அணியில் நான்காவது நிலையில் ஆடுகிறார் ” என கூறியது அவரைப்பற்றிய மேர்கோள்களின் சிகரம். சரி அமெரிக்க அதிபர் ஒபாமா சச்சின் பற்றி கூறியிருக்கிறாரா? இப்படி ஒரு சுவாரஸ்யமான கேள்வி புகழ்பெற்ற கேள்விபதில் தளமான குவோராவில் எழுப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கான பதில் இல்லை என்பதே. குவோராவில் சச்சின் பற்றி கேட்க்ப்பட்டுள்ள மற்றொரு கேள்வி ‘சச்சின் இஸ்லாமியராக இருந்திருந்தால் இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டிருப்பாரா? என்பது. இந்த கேள்விக்கான பதில் இந்தியாவின் பெருமையை உணர்த்துகிறது. ஆம் என்பதே அந்த பதில் விரிவான பதிலுக்கு பார்க்க… ( http://www.quora.com/If-Sachin-Tendulkar-were-a-Muslim-would-he-get-the-same-adulation)


3.சச்சின் \பிராட்மேன்.


கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் சச்சின் பல மக்த்தான வீரரோடு ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளார். லாரா, பாண்டிங் என நீளும் இந்த பட்டியலில் அதிக அளவில் இடம் பெறுவது கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேன் தான். சச்சின்\பிராட்மேனில் யார் சிறந்தவர். இந்த ஒப்பீட்டுக்கு எண்ணிக்கைகளால் பதில் அளிக்கிறது தி ரோர்.காம் கட்டுரை. பிராட்மேனே சிறந்தவர் என புள்ளிவிவர ஒப்பீட்டால் இந்த கட்டுரை நிறுவினாலும் அது ஒரு பகுதி உண்மையே என்பதை இதில் இடம்பெறாத சச்சினின் சாதனைகள் சொல்லும். ( http://www.theroar.com.au/2011/02/28/sachin-tendulkar-and-don-bradman-theres-no-comparison/)


4. யார் இந்த சச்சின்?


சச்சின் யார் என்று யாரேனும் கேட்பார்களா? இன்டெர்ட்டில் கேட்டிருக்கின்றனர். ஆனால் இதில் கோபப்பட ஏதுமில்லை. கிரிக்கெட்டை அதிகம் அறியாதவர் கூட சச்சின் பற்றி கேள்விபடும் நிலை இருப்பதால் , சச்சினை அறியாதவர்களுக்கு அவரை அறிமுகம் செய்வதற்காக இந்த கேள்விகளும் பதில்களும் . ( http://www.ask.com/question/sachin-tendulkar-homepage)


5. சச்சின் சாதனை படங்கள்.


சச்சினின் கம்பீர புகைப்படங்களை பார்த்து ரசிப்பதை வித சச்சின் அபிமானிகளுக்கு உற்சாகம் தரக்கூடியது எது? அல்ஜசிரா சச்சினின் மிகச்சிறந்த புகைபப்டங்களை தொகுத்து தந்திருக்கிறது. ( http://www.aljazeera.com/indepth/inpictures/2013/10/cricket-tendulkar-announces-retirement-20131010135416699995.html)


6. சச்சின் வீடியோ.


சச்சின் பேட் செய்வதை பார்ப்பதை விட பரவ‌சம் ஏது. சச்சின் பற்றிய யூடியூப் வீடியோ தொகுப்பு இந்த பரவசத்தை தருகிறது. (http://www.youtube.com/channel/HCESYF1LiffFய் ) இதே போல் ஒரு நாள் போட்டியில் சச்சின் இரட்டை சதத்தை கண்டு மகிழ‌… http://www.youtube.com/watch?v=aGNSU_Y_5IM


7. என்ன ஒரு வீரர்.


சச்சின் ஓய்வு பெற்றது பற்றி கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு. (http://www.thatscricket.com/news/2013/10/10/who-said-what-on-sachin-s-retirement-069501.htm )


8. சச்சின் சரிதை.


சச்சின் பற்றி விக்கிபீடியா கட்டுரை விரிவாக இருக்கிற‌து. கிரிகின்போ அறிமுகம் புள்ளிவிவரங்களை துல்லியமாக தடுகிறது. திரைப்பட களஞ்சியமான ஐஎம்டிபியிலும் சச்சின் பற்றிய அறிமுகம் இருக்கிற‌து தெரியுமா? (http://www.imdb.com/name/nm1340094/ )


9. சச்சின் விமர்சிக்கப்படுவது ஏன்?


சச்சின் கொண்டாடப்படுகிறார். ஆனால் அவர் விமர்சனத்திற்கும் ஆளாகியிருக்கிறார். சச்சின் விமர்சிக்கப்படுவது ஏன்? இந்த கேள்விக்கு உளவியல் நோக்கில் பதில் தருகிறது இந்த வலைப்பதிவு. ( http://senantixtwentytwoyards.blogspot.in/2011/10/why-do-people-criticise-sachin.html)


10.சச்சினுக்கு பிறகு?


ஒவ்வொரு கிரிக்கெட ரசிகனும் கேட்கும் கேள்வி தான். இந்த கேள்விக்கான கொஞ்சம் சுவாரஸ்யமான பதில் இதோ… http://cricketwithballs.com/2011/07/23/after-sachin/
சச்சின் பற்றி செயலிகளும் அநேகம் இருக்கின்றன. அவை பற்றி தனிப்பதிவே எழுதலாம்.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்!

அடிப்படை மற்றும் சிறப்பான வசதிகளுடன் கூடிய பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

1. Samsung Galaxy Fame:

3ஜி, வை-பி, இரண்டு கேமரா, 3.5 அங்குல டச் ஸ்கிரீன், இரண்டு சிம், 1,300 பேட்டரி, ஜெல்லி பீன் 4.1 என சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்ட இந்த போன் விலை ரூ. 8,450.



2. LG Optimus L4 II Dual: 

இரண்டு சிம், 512 எம்.பி. ராம் மெமரி, 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், ஜெல்லி பீன் 4.1.சிஸ்டம், 3.8 அங்குல திரை என நல்ல அம்சங்களுடன் கொண்ட இந்த போன் கடைகளில் ரூ.8,800க்குக் கிடைக்கிறது.



3. Nokia Lumia 520:

இது ஒரு விண்டோஸ் சிஸ்டம் கொண்ட போன்.
மல்ட்டி டச் வசதி கொண்ட 4 அங்குல திரை. 5 எம்.பி. கேமரா, டூயல் கோர் எஸ்4 ப்ராசசர், 512 எம்.பி. ராம், 1430mAh திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது. சில்லரை வர்த்தகர்களிடம் இதன் விலை ரூ. 9,900.


4. Panasonic T11:

நல்ல விரைவான செயல்பாட்டிற்க்கு குவாட் கோர் ப்ராசசர், 2 கிகா ஹெர்ட்ஸ் சிப்செட், ஜெல்லி பீன் 4.1, 4 அங்குல ஐ.பி.எஸ். டச் ஸ்கிரீன், 5 எம்.பி.கேமரா, 1500 mAh திறன் கொண்ட பேட்டரி, 1 ஜி.பி. ராம் மெமரி என அம்சங்கள் கொண்ட இந்த போன் ரூ.9,250க்குக் கிடைக்கிறது.


5. Micromax Canvas Fun A76:

1.2 கிகா ஹெர்ட்ஸ் வேக ப்ராசசர், ஜெல்லி பீன் 4.2., டச் ஸ்கிரீன் 5 அங்குல அகலத்தில், 5 எம்.பி.கேமரா, 2000 mAh திறன் கொண்ட பேட்டரி கொண்ட இந்த மொபைல் போனை ரூ.8,300க்கு வாங்கலாம்.

மூலிகை மருத்துவத்தில் நீரிழிவுக்கு தீர்வு!

Kallimutaiyan clean water and a thin stem, and two 3-inch stems to eat on an empty stomach every morning with the body melivat   controlling diabetes.


கள்ளிமுடையான்

கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு  வர உடல் மெலிவதுடன் நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.

இன்சுலின் செடி

இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம். இந்த  இலையைத்  தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க  விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை  சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ்  எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என  அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இச்செடி  கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.

சர்க்கரைக்கொல்லி


கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்புச்சுவை தெரிவதில்லை.  இலையை உலர  வைத்து பொடியாக்கி தினமும் அருந்தலாம். இது கொடிவகை தாவரம்.

சிறியாநங்கை

கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.

ஸ்டீவியா என்னும் சீனித்துளசி


தென்அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இனிப்புச்சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை உலர வைத்து  பொடியாக்கி,  டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இது பூஜ்யம் கலோரி (ஞீமீக்ஷீஷீ  சிணீறீஷீக்ஷீவீமீ) மதிப்புடையது.   அதனால், இனிப்புக்குப் பதிலாக தாராளமாக உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும்  இத்தாவரம், தமிழகத்தில் நன்கு வளர்கிறது.   இவற்றோடு காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாறு அருந்துதல்,  வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என  நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய வழிமுறைகள் நீரிழிவைக் கட் டுக்குள் வைக்க உதவுகின்றன.