Search This Blog

Wednesday, 11 September 2013

'தன் கையே தனக்கு உதவி'..........குட்டிக்கதை



வினோத்தும் விக்னேஷும் நண்பர்கள்..இருவரும் ஒரே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர்.

வினோத் வீட்டில் வேலைக்காரர்கள் இருந்தனர்.அவனுக்கு பள்ளிக்கு செல்ல சீருடை அணிவிப்பது..அவனது ஷூவுக்கு பாலிஷ் போட்டு அணிவிப்பது...அவனுக்கு தலைவாரிவிடுவது எல்லாம் வேலையாட்களின் வேலை...

ஒரு நாள் அவன் பள்ளி செல்லும்வழியில் இருந்த விக்னேஷ் வீட்டிற்கு செல்ல நேரிட்டது.

அப்போது விக்னேஷ்...தன் ஷூவிற்கு பாலிஷ் போடுவதைப் பார்த்தான்...'உன் ஷூவிற்கு நீயே வா பாலிஷ் போடுவாய்' என வினோத் ஆச்சிரியத்துடன் கேட்டான்.

'ஆமாம்..நீ வேறு யார் ஷூவிற்கு பாலிஷ் போடுவாய் 'என்று கிண்டலாக பதிலுக்குக் கேட்டான்..விக்னேஷ்.

'என் ஷூவிற்கு வேலையாட்கள் தான் பாலிஷ் போடுவார்கள் 'என்றான் வினோத்.

'அப்படியா..நமக்காக நம் வேலையை பிறரைச் செய்யச் சொல்வது தவறல்லவா..'.கடவுள் நம் வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே நமக்கு இரு கைகளை கொடுத்திருக்கிறார் 'என்றான் விக்னேஷ்.

அது கேட்டு தன் தவறை உணர்ந்த வினோத்..இனி தன் வேலைகளைத் தானே செய்யவேண்டும் என்று தீர்மானித்தான்.

தன் வேலையைத் தானே பார்ப்பது ..தவறில்லை..அது நம்மை மேலும் சந்தோஷமாக வைக்கும்.

(ஆப்ரஹாம் லிங்கன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது)

ஆட்டின் புத்திசாலித்தனம்.........குட்டிக்கதை



ஒரு காட்டில் ஓநாய் ஒன்று இருந்தது..அது இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து ..ஊரில் இருந்த ஆடு..மாடுகளை வீழ்த்தி உண்டு வந்தது..

அதே ஊரில் மாடசாமி என்பவன் ஒரு ஆட்டை வளர்த்து வந்தான்.அந்த ஆடு புத்திசாலியாக வளர்ந்தது...

ஒரு நாள் இரவு ஊருக்குள் வந்த ஓநாய் மாடசாமியின் ஆட்டைப் பார்த்துவிட்டது,அதன் மீது பாய தயாரானது...ஆடோ..உயரமான இடத்திற்கு ஓடியது.அங்கிருந்தபடியே புத்திசாலியான அந்த ஆடு..
கீழே இருந்த ஓநாயிடம் ..'உமக்கு உணவாக ஆக நான் தயார்...ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு சிறு ஆசை...இவ்வளவு அழகாக உள்ள நீங்கள் பாட...நான் ஆட வேண்டும்' என்று கூறியது.

தன்னை அழகன் என்ற புகழ்ச்சியில் மகிழ்ந்த ஓநாய் பாட சம்மதித்து தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.

அந்த சத்தம் கேட்டு ..தூங்கிக்கொண்டிருந்த ஊர்மக்கள் விழித்தெழிந்து வந்து ஓநாயை அடித்துக் கொன்றனர்.

புகழ்ச்சியில் மயங்கிய ஓநாய் உயிரைவிட்டது.ஊரில் இருந்த ஆடு..மாடுகள் பயமின்றி வாழ்ந்தன...மாடசாமியின் ஆட்டின் புத்திக்கூர்மையை அனைவரும் பாராட்டினர்.

பரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் சீக்கிரம் வரும்!



"பரோட்டா அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு, நீரிழிவு நோய் வர அதிகம் வாய்ப்புள்ளது,'' என்று, கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மைதா மாவினால் தயாரிக்கப்படும் "பரோட்டா' உணவு, நமது பாரம்பரிய உணவுகளைப் பின்னுக்குத்தள்ளி, தமிழக மக்களின் முக்கிய உணவாக மாறியுள்ளது; இதனால், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி சார்பில், கோவையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில், நேற்று காலை 11 மணியளவில், இந்த பேரணியை பாரதியார் பல்கலை பதிவாளர் ராதாகிருஷணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி, பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக, வ.உ.சி., மைதானம் வந்தடைந்தது. மாணவ, மாணவியர் புரோட்டா உணவால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தி கோஷமிட்ட படி நடந்து வந்தனர்.

இதுகுறித்து ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரி முதன்மை செயலாளர் அஜீத்குமார் லால்மோகன் கூறியதாவது: சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் மட்டுமில்லை; சாப்பிட கூடாத உணவைச் சாப்பிடுவதாலும் பல்வேறு நோய்கள் உண்டாகி வருகின்றன. மக்களுக்கு தங்கள் சாப்பிடும் உணவு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. கடைகளில் புதிய பெயரில் எந்த உணவை விற்றாலும், அதை வாங்கிச் சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. அதனால், உடலுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி அவர்கள் அறிவதில்லை. இன்றைக்கு பெரும்பாலான உணவு வகைகள், மைதா மாவில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் சிறிய மற்றும் நடுத்தர ஓட்டல்களில் மைதா மாவில் தயாரிக்கப்படும் "பரோட்டா'தான் அதிகளவில் விற்பனையாகிறது. மைதா மாவு, ரவையில் இருந்து தயாரிக்கப்படுகிறது; மைதா இயல்பாக கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்; அதை வெண்மையாக மாற்ற, "பென்சாயில் பெராக்ஸைடு' மற்றும் "அலாக்ஸான்' என்ற வேதிப்பொருள் கலக்கப்படுகிறது; இதனால், மைதா வெள்ளை நிறமாகவும், மிருதுவான தன்மையுடனும் மாறுகிறது.இந்த "பென்சாயில் பெராக்ஸைடு' என்பது, அழகு நிலையங்களில் முகத்தை பொலிவு படுத்தவும், முகப்பருவை போக்கவும் பயன்படும் மருந்தாகும். "அலாக்ஸான்' என்பது படிகத்தன்மை கொண்ட வேதிக்கலவை. இது உணவில் கலந்தால், நீரிழிவு நோய் உண்டாகும் என, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைதாவில் "அலாக்ஸான்' கலப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இது கணையநீர் சுரப்பியை சோர்வடைய செய்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த விடாமல் தடுக்கிறது.

இதனால் கணையத்தில் இன்சுலின் சுரப்பது தடை படுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் சாப்பிவோருக்கும் நீரிழிவு நோய் வர அதிகமான வாய்ப்புள்ளது. மைதா "பரோட்டா' சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தற்போது பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நடத்திய ஆய்வில், "பரோட்டாவில் "கார்போஹைடிரேட்' அதிகம் இருப்பதும், நார் சத்து இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் விலை குறைவு என்பதால் "பரோட்டா' உள்ளிட்ட மைதாவில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்; இதனால், பணக்காரர்களை மட்டுமே அதிகம் பாதித்து வந்த பல நோய்கள், ஏழைகளுக்கும் வர வாய்ப்புள்ளது; எனவே, "பரோட்டா' சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு, அஜித்குமார் லால்மோகன் கூறினார்.

இது விலங்குகளுக்கான உணவு...!



மைதா மாவினால் தயாரிக்கப்படும் "பரோட்டா' குறித்த வேறு சில தகவல்கள்:
* மைதா மாவில் தயாரிக்கப்படும் பரோட்டா, நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில், இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்தது.
* மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்கத் தேவையில்லை. இதில், கொழுப்புச் சத்துஅதிகம் இருப்பதால், பன்றிகளுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிடத் துவங்கினர்.
* இன்றைக்கு மைதாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உணவு பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிக அளவில் தயாரிக்கப்படுவது புரோட்டா மட்டுமே.

திருமண ஆல்பம் சுலபமாக தயாரிக்க - Wedding Album Maker!


திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தையும் நாம் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நமது திருமணத்திற்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளீக செய்யவும. இதனை இன்ஸ்டால்  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 

 
 
 
இதில் நான்கு விதமான விண்டோ கிடைக்கும். இதில் கீழே உள்ள விண்டோவில் உள்ள + பட்டனை கிளிக் செய்து உங்கள் விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
 


 
 
இதில் Add.,Add All.Delete.90+ Text.Auto Adjust.Background Music.More Options என நிறைய டேப்புகள் இருக்கும். இதில் சில புகைப்படங்கள் vertical மற்றும்  Horizontal போஷிஷனில் ;இருக்கும். இவ்வாறு Vertical போஷிஷனில் இருக்கும் புகைப்டத்தினை நாம் Horizontala மாற்ற இதில் உள்ள 90+ கிளிக் செய்து அட்ஜஸ்ட் செய்யலாம்.மேலும் இதில் உள்ள Test கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
 
 



 இதில் Transition.Pans& Zoon.Text.Artclips.subtilte process என ஆறுவிதமான டேப்புகள் இருக்கும். இதில் உள்ள Transtion கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் புகைப்படங்களுக்கு இடையில் வரும் Transtion Effect தேர்வு செய்யலாம். இதில் உள்ள Transtion Effect களை கீழேகொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்க்ள...


 



 இதில் உள்ள Text கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் வேண்டிய பாண்ட்அளவினையும் எபெக்ட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.


 



இதில் அடுத்துள்ள Art Clips கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 7 வித நிகழ்ச்சிகளுக்கான விதவிதமான ஆர்ட் கிளிப்புகள் இருக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.


 
 
 
 
 
அடுத்துள்ள டேப்பில் சப் டைட்டில் இருக்கும் நாம் நமக் குதேவையான சப் டைடிலை தேர் வு செய்துகொள்லாம்.
 
 

 
 
 
சில புகைப்படங்கள் வெளிச்சம் அதிகமாகவும் சில புகைப்படங்கள் வெளிச்சம் குறைவாகவும் இருக்கும. அவ்வாறான புகைப்படங்களுக்கு இதில ;உள்ள பிரைட்,கான்ட்ராஸ்ட் கிளிக் செய்வது மூலம நாம புகைப்படத்தின்  தரத்தினை மேம்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 
 
 
நாம் புகைப்படத்தினை தேர்வு செய்ய வசதியாக இதில வலது புறம் நாம் தேர் வுசெய்த புகைப்படங்கள் வரிசையாக இருக்கும் தேவையானதை கிளிக் செய்து மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.
 




 
 
 
இந்த அனைத்து பணிகளும் முடிந்தபின் இதில் உள்ள Done அழுத்தவும். பின்னர மெயின் விண்டோவிற்கு வரவும். இதில் Album Photo.Transition & Music.Album Theme என மூன்று டேப்புகள் இருக்கும். இதில் முதலாவதாக உள்ள Album Photo வில் தான் நாம் இவ்வளவு வேலைகளையும் செய்தோம். இனி இரண்டாவதாக உள்ள Transition &Music கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் கம்யூட்டரில் இருந்து தேவையான பாடல்களை தேர்வு செய்யவும். திருமணத்திற்கு ஏற்ற பாடலை தேர்வு செய்யவும்.சோக பாடல்களை தவிர்த்துவிடவும்.பாடலை கட் செய்யும் வசதி உள்ளதால் தேவையான வரிகளை மட்டும் சேர்க்கலாம். 






இப்போது இதில் உள்ள Transition பற்றி பார்க்கலாம் நாம் விரும்பமான எபெக்ட் கொண்டுவந்து அது எவ்வளவு நேரத்தில் மாற வேண்டும் என செகண்ட் களும ;இதில செட் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 



இறுதியாக இதில விதவிதமான தீம் கள் உள்ளது. அதில் வரும் கூடுதல் எபெக்ட்களும் நாம் செட் செய்து அதனையும் ப்ரிவியூ பார்க்கும் வசதி உள்ளது. 
 
 
 
இதில் இரண்டாவது டேப்பில் உள்ள Choose Menu கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பபன் ஆகும். இதில் திருமணம் ம்ட்டும் அல்லாமல் பிறந்தநாள் காதுகுத்தல் வேறு விஷேஷங்களுக்கும் நாம் இதில செட் செய்துகொள்ளலாம். இதில் திருமணத்திற்கு என்று 60 க்கும் மேற்பட்ட டிசைன்களை இணைத்துள்ளார்கள்.
 
 
 


வலதுபுற விண்டோவில் விதவிதமான டிசைன்களை உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் ;தேவையானதை கிளிக் செய்தால் போதும் உங்கள் புகைப்படத்தின் முகப்பில வந்து அந்த டிசைன் அமர்ந்துகொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்க்ள.


 




அனைத்துபணிகளும் முடிந்ததும் நாம் இதில் உள்ள ப்ரிவியூவிண்டோவில் நாம் செட் செய்த ஆல்பத்தினை ப்ரிவியூ ஓடவிடலாம். தவறுகள் மாறுதல்கள்இருந்தால் நாம் திருத்திக்கொள்ளலாம்.ஒரு படம் ஓடும் சமயம்தான் அதில் உள்ள நிறை குறைகள் நமக்கு தெரியவரும். நண்பர் அல்லது உறவினர் வைத்துகொண்டு இதில் உள்ள குறை நிறைகளை நாம் கண்டுபிடிக்கலாம்.கீழே உள் ளவிண்டோவில் பாருங்கள்.


 


இறுதியாக இதில் உள்ள Burn Disc கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் இதில் நாம் நமது வீடியோவினை நமது கம்யூட்டரில் சேமித்துவைக்கலாம். அல்லது டிவிடியாக கூட இதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

 






 
 
வீடியோ பார்மெட் வகைகளை கீழே உள்ள விண்டோவில் காணலாம் நாம் வீடியோவினை எங்கு பார்க்கபோகின்றோமோ அதற்கு ஏற்ப வீடியோ பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் இதில் செல்போன்;,யூ டியூப்,ஆன்ட்ராயிட்,வெப் ஆல்பம்,புளு ரே டிஸ்க்.எப்எல்வி மூவி,டிவிக்ஸ் என நமக்கு தேவையான பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.கீழே அவர்கள் கொடுத்துள்ள பார்மெட்டுக்களை பாருங்கள்.
 
 



இறுதியாக இதில் உள்ள Create Now பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான புகைப்படங்கள் ஆல்பமாக மாற ஆரம்பிக்கும்.. எவ்வளவு நேரம் ஆகும் என்பதனை இதில் உள்ள ஸ்லைடர் மூலம் நாம் எளிதில அறிந்துகொள்ளலாம்.



 

 
 
 
 
இரண்டு மூன்று முறை முயற்சி செய்துபாருங்கள் இறுதியில் அட்டகாசமான வீடியோ உங்களுக்கு கிடைக்கும்.. இதனை நண்பர்கள்.உறவினர்களுக்கும்  பகுதிநேர வேலையாக செய்து கொடுத்து பணம் பெறலாம்.
 
 
 

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

 


நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.


C  - Common
O  - Oriented
M  - Machine
P  - Particularly
U  - Used for
T  - Trade
E  - Education and
R  - Research


COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and

பயமே கூடாது.........குட்டிக்கதை



ஒரு சிங்கமும் ...யானையும் நண்பர்களாக இருந்தது.

ஒரு நாள் சிங்கம் யானையிடம் தனக்கு சேவல் கூவும்போது பயமாயிருக்கும் என்றது...

அதைக்கேட்ட யானை...சிங்கத்தைப் பரிகசித்தது.. 'பல மிருகங்கள்,உன்னை காட்டுக்கு ராஜா எனக் கூறி உன்னிடம் பயப்படும் போது..கேவலம்..நீ..ஒரு சேவலுக்குப் பயப்படுகிறாய் என்றது..'
'
அப்போது..ஒரு 'ஈ ' ஒன்று பறந்து வந்து..யானையின் காதருகே அமர்ந்தது..உடனே பயந்த யானை..தன் காதுகளை பலமாக ஆட்டியது.

'ஈ' க்கு பயந்த யானையைப் பார்த்து 'என்னை பரிகசித்த நீ கேவலம் 'ஈ' க்கு பயப்படுகிறாயே 'என்றது சிங்கம்.

'அது என் காதிற்குள் போனால் ..நான் அவ்வளவு தான்' என்றது யானை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் பயம்..ஆனால் பயம் என்பதே அர்த்தமில்லாதது...நாம் வழ்வில் எந்த விஷயத்திற்கும் பயமில்லாமல் தைரியமாக செயல்படவேண்டும்.

ஆரஞ்சு க்ரீன் ஐஸ் டீ!

 ஆரஞ்சு க்ரீன் ஐஸ் டீ


தேவையான பொருட்கள்:

க்ரீன் டீ பேக் - 2
தண்ணீர் - 1 கப்
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
தேன் - 1 கப்
எலுமிச்சை ஜூஸ் - 1/2 கப்
இஞ்சி சாறு - 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டி - 6 

செய்முறை:

• முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் க்ரீன் பேக்குகளை டீயின் நிறம் வரும் வரை ஊற வைத்து, குளிர வைக்க வேண்டும்.

• பின்னர் அதில் ஆரஞ்சு ஜூஸ், தேன், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

• பின்பு அதனை டம்ளரில் ஊற்றி, அதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சூப்பரான ஆரஞ்சு க்ரீன் ஐஸ் டீ!!! 

வேர்க்கடலை சாலட்!



 வேர்க்கடலை சாலட்




தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை - 1 கப்
வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 1
மாங்காய் - 1
ப.மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை -  சிறிதளவு

செய்முறை :

• வேர்க்கடலையை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

• வெங்காயம், வெள்ளரிக்காய், மாங்காய், ப.மிளகாயை ஒரே அளவில் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், வெள்ளரிக்காய், மாங்காய், ப.மிளகாயை போட்டு கலக்க வேண்டும்.

• கடைசியாக எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

முயற்சி வேண்டும்.........குட்டிக்கதை



ராமன் பள்ளிப்பாடங்களை சரிவர படிக்கமாட்டான்.அதனால் அவனால்...அவன் நண்பன் லட்சுமணனைப்போல அதிக மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை.

நாளை முதல் தேர்வு ஆரம்பம்.கடவுளிடம் ராமன் ..இந்த முறை லட்சுமணனைவிட அதிக மதிப்பெண்கள் கிடைக்குமாறு செய் என வேண்டினான்.ஆனால் தேர்வு முடிவு வந்ததும்...லட்சுமணனுக்கே அதிக மதிப்பெண்கள்.

கோவிலுக்கு வந்த ராமன் ..'கடவுளே.. நான் உன்னை அவ்வளவு வேண்டியும் என்னை ஏமாற்றிவிட்டாயே!' என்றான்.

ஆண்டவன் உடனே அவன் முன் தோன்றி..'ராமா..உனக்கே மதிப்பெண்கள் அதிகம் கிடைக்க வழி செய்ய நான் முனைந்தேன்..ஆனால் அதற்கு நீ படித்து..பதில்களை எழுதியிருந்தால் மட்டுமே என்னால் முடியும்.ஆனால் நீ எழுதியிருந்தவை எல்லாம் தவறு என்று தெரிந்து என்னால் எப்படி உனக்கு உதவிட முடியும்' என்றார்.

ராமனுக்கு அப்போதுதான் தெரிந்தது...ஆண்டவனை மட்டுமே வேண்டினால் போதாது...நாமும் உழைத்து படித்திருக்க வேண்டும் என்று.

தெய்வ நம்பிக்கை மட்டுமே இருந்தால் போதாது ஒரு செயலில் வெற்றியடைய நம் முயற்சியும் வேண்டும்.

கையே சுகாதாரமானது.........குட்டிக்கதை



ராமனும்,லட்சுமணனும் நண்பர்கள்.ஒரு முறை அவர்கள் இருவரும் ஒரு நண்பனின் வீட்டிற்கு சாப்பிடச் சென்றார்கள்.


ராமன்...உணவை,எடுத்து சாப்பிட ஒரு ஸ்பூனும்..ஒரு ஃபோர்க்கும் கேட்டான்.லட்சுமணனோ..தன் கையால் உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்...

உடனே ராமன் அவனைப் பார்த்து 'ஸ்பூனை உபயோகித்து சாப்பிடு...அதுதான் சுகாதாரமானது...சுத்தமானது..'என்றான்.

ஆனால் லட்சுமணன் சிரித்துக்கொண்டே...'இல்லை..ராமா..கைதான் சிறந்தது..இது தான் சுகாதாரமானது...ஏனெனில் என் கையை என்னைவிட வேறு எவரும் பயன்படுத்தி இருக்கமுடியாது'என்றான்.

ராமன் வாய் மூடி மௌனியானான்.

(உண்மையில் இது வின்ஸ்டன் சர்ச்சிலுக்கும்...நம் நாட்டின் ஜனாதிபதியாயிருந்த ராதாகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த சம்பவம்

உடல் உறுதியாகும் பயிற்சி!


உடல் உறுதியாகும் பயிற்சி


உடலில் உறுதி அடைய பல்வேறு பயிற்சிகள் உள்ளது. அதிலும் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது. இந்த பயிற்சியை வீட்டில் தொடர்ந்து தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இந்த பயிற்சி செய்ய 20 நிமிடம் இருந்தால் போதுமானது.

இப்போது இந்த பயிற்சியை பார்க்கலாம். முதலில் தரையில் வசதியாக நிற்கவும். காலை லேசாக அகட்டி, மூச்சை உள் இழுத்தபடி ஐந்து விநாடிகள் இருக்கவும். பிறகு லேசாக முதுகைப் பின்னால் நகர்த்தவும். இப்போது மூச்சை உள் இழுத்தபடி இடது காலைப் பின்னால் மடக்கி இடது கையால் பிடிக்கவும்.

மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் காலைப் பழைய நிலைக்கு கொண்டு வரவும். அடுத்து கால் மாற்றி இதேபோல் செய்யவும். இப்படித் தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும்.

பலன்கள்... இந்த பயிற்சி அடிவயிற்றுப் பகுதிகளுக்கு மிகவும் நல்லது. இந்த பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் உடல் உறுதியாகும்.


வயிற்றுக்கான எளிய பயிற்சி!


வயிற்றுக்கான எளிய பயிற்சி

வயிற்றுப்பகுதியில் உள்ள சதை குறைய எளிய பயிற்சிகள் பல உள்ளன. அவற்றுள் இதுவும் ஒன்று. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆனால் அதிக தொப்பை உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி பலன் தராது. தரையில் நன்றாக காலை நீட்டி உட்காரவும். வலது காலை இடது தொடையில் உள் பக்கமாக வைக்கவும். மூச்சை உள் இழுத்தபடி வலது கையை மேலே உயர்த்திய படி, இடது கையால் இடது கால் பாதத்தை முடிந்த வைர தொட முயற்சிக்கவும்.

கைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகையில் மூச்சை வெளியே விடவும். கால்கள் மாற்றி மீண்டும் இதேபோல் செய்யவும். இப்படி பத்து முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.  

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 10 முறை செய்தால் போதுமானது.படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 25 முதல் 30 வரை செய்யலாம்.இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பலன்கள்.....அடிவயிற்றுபாகங்களுக்கு அழுத்தம் கிடைக்கும். கல்லீரல், கணையம், பித்தப்பை போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் சீரடையும். 


தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி!


 தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை: 


முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும். 

இடை மெலிய எளிய உடற்பயிற்சி!


 இடை மெலிய எளிய உடற்பயிற்சி


இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக்கு பிறகு, தங்களின் உடல் உருமாற்றத்தை பார்த்து பல  பெண்கள் பதட்டத்துக்கு ஆளாகின்றனர். 


மெல்லி இடைக்கான சிறப்பு பயிற்சி இதோ... முதலில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில் கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவாக மூச்சை உள் இழுத்தபடி உடம்பை மேலே உயர்த்தவும். 



முகத்தை இடது பக்கம் திருப்பி, வலது கால் பாதத்தை பார்க்கவும். பத்து எண்ணும் வரையில் அதே நிலையில் இருக்கவும். மூச்சை வெளியே விட்டபடி திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல் மூசசை உள் இழுத்தபடி வலது பக்கம் திரும்பி இடது கால் பாதத்தை பார்க்கவும். 



பத்து எண்ணியவுடன் மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதுபோல் தொடர்ந்து 10 முறை செய்யவும்.

பலன்கள்:

முதுகு வலி நீங்கும். முதுகுதண்டு வலுப்பெறும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். மலச்சிக்கல் குணமாகும். வயிற்று பகுதியில் சதை நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும். தைராய்டு பிரச்சனைகளுக்கு இந்த பயிற்சி ஏற்றது.

ஆண்டவன் படைப்பில்.........குட்டிக்கதை



ஒரு காட்டில் இருந்த மான் தண்ணீர் குடிக்க தண்ணீர் அதிகம் இருந்த குளத்தருகே வந்தது.

தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்தது.தனக்கு ஆண்டவன் அளித்துள்ள அழகான உருவத்தையும்...புள்ளிகளையும் கொம்புகளையும் கண்டு மகிழ்ந்தது.

அப்போது சிறுத்து நீண்ட தன் கால்களைப் பார்த்தது.என்னை இவ்வளவு அழகாக படைத்த இறைவன் ...கால்களை இப்படி படைத்துவிட்டாரே என வருந்தியது.

அச்சமயம் ஒரு சிங்கம் ...அந்த மானை அடித்து சாப்பிட எண்ணி மானை நோக்கிப் பாய ...அலறி அடித்து மான் நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடி தப்பியது.

அப்போது அது.. ஆண்டவன் தனக்கு ஏன் இப்படிப்பட்ட கால்களைக் கொடுத்தான் என்பதை உணர்ந்து கடவுளுக்கு நன்றியைச் சொன்னது.

ஆண்டவன் படைப்பில் காரணமில்லாமல் எதையும் அவன் செய்வதில்லை.
 
 

புத்திசாலிச் சிறுவன்.........குட்டிக்கதை











ஒரு நாள் சில சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் ஒரு சிறுவன் உதைத்த பந்து அருகில் இருந்த மரத்தின் பொந்திற்குள் விழுந்தது.

பந்துக்கு சொந்தக்காரச் சிறுவன் அழ ஆரம்பித்தான்.

அந்தப் பந்தை பொந்திலிருந்து எப்படி எடுப்பது என்று யாருக்கும் தெரியவில்லை.

அப்பொழுது ஒரு புத்திசாலிச் சிறுவன் அருகிலிருந்த வீட்டிலிருந்து ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து பொந்திற்குள் கொட்ட பந்து எழும்பி தண்ணீரின் மேல் வந்தது. அந்த பந்தை எடுத்து உரிய சிறுவனிடம் ஒப்படைத்தான்.

எந்த ஒரு காரியத்திற்கும் சற்று சிந்தித்தால் அந்த சிக்கலில் இருந்து விடுபடலாம்.