|
Search This Blog
Sunday, 22 September 2013
தெய்வீக திருவண்ணாமலை! சுற்றுலாத்தலம்!
கர்ப்பமாக இருக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!
ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்று எடுத்தால் தான் முழுமை பெறுகிறாள். ஆனால் அது லேசுபட்ட விடயமல்ல.
கருவுற்று ஒரு குழந்தையை பெற்று எடுப்பதற்குள் ஒரு பெண் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவைகளை எல்லாம் ஒரே பட்டியலில் வகைப்படுத்தி விட முடியாது.
அவைகளை தெரிந்து கொண்டால், கர்ப்ப காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்டு உங்களுக்கே வியப்பு ஏற்படும்.
ஆனால் அவைகளை கண்டு பயப்பட தேவையில்லை. அவைகளில் பலவகைகள் சாதாரண மாற்றங்களே. இதனைப் பற்றி மேலும் அறிய விலாவரியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து கிடைக்க அதிகமாக தண்ணீர் குடித்தாக வேண்டும். அப்படி அதிக அளவில் நீரைக் குடிப்பதனால், தண்ணீரை பார்த்தாலே அலுப்புத் தட்டிவிடும். இது கர்ப்ப காலத்தில் நடக்கும் மாற்றங்களில் பொதுவானது.
மேலும் ஓரிரு மாதங்கள் சென்ற பின் தண்ணீரை பார்த்தாலே வெறுப்பு ஏற்படும். அதனால் இங்கு கொடுத்திருப்பதை முயற்சி செய்து பாருங்கள். அது என்னவென்றால், உங்களுக்கு பிடித்த பானத்தை குளிர் சாதனப் பெட்டியில் உறைய வைத்து, ஐஸ் கட்டிகளாக மாற்றுங்கள்.
பின் அதனை குடிக்கும் தண்ணீரில் கலந்து பின் பருகுங்கள். இது உங்களுக்கு தண்ணீரைக் கண்டால் ஏற்படுத்தும் புரட்டலை கூட தடுத்து நிறுத்தும். மேலும் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கூட இதனை முயற்சி செய்து பாருங்கள்.
அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாமல், இயற்கை முறையில் பிரசவிக்க ஆசைப்பட்டால், அதற்கு தயார்படுத்திக் கொள்ள சில எளிய முறைகளை பின்பற்றினாலே போதுமானது.
கர்ப்பம் தரித்து 32 வாரங்கள் அடைந்ததும், குழந்தை வெளியேறும் இடத்தில் ஒவ்வொரு நாள் இரவும் பாதாம் எண்ணெயை தடவுங்கள்.
பிரசவத்திற்கு முன் இப்படி செய்வதால், அதிக வலி இல்லாமல், தசைகள் அதிகமாக கிழியாமல் சுகப்பிரசவம் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
கர்ப்ப காலம், குறட்டை விடச் செய்யும் என்பதை கேட்க ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், உடல் மென்மையாக மாறி வீக்கம் அடையும்; அதில் பாதங்களும் அடங்கும்.
அதனால் உங்கள் சுவாச குழாய்கள் குறட்டை வருவதை தடுத்து நிறுத்தாது. ஆகவே உங்கள் கணவருக்கு முன்னதாகவே இதற்கான எச்சரிக்கையை விடுங்கள்.
உங்களுக்கே உங்கள் குறட்டையை தாங்க முடியவில்லை என்றால், உங்கள் மருத்துவரை அணுகி அதை தடுக்க முடியுமா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்தில் முதுகு வலி மற்றும் இதர உடல்நல பிரச்சனைகளுக்கு, தண்டெலும்பு நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவரை சீரான முறையில் சந்தியுங்கள்.
ஒட்டுமொத்த உடல் நலத்தை காக்கவும், வலியை நீக்கவும், முதுகு தண்டை எப்படி சீர்படுத்துவது என்பது அவ்வகை மருத்துவர்களுக்கு தெரியும். மேலும் அவர்களை சந்திக்கும் செலவுகளை மருத்துவ காப்பீடு மூலமாக திரும்பி பெற்றுக் கொள்ளலாம்.
தாய்மை அடைய போகும் பெண்களே, தலைமுடி பராமரிப்பு பற்றி உங்களுக்கு சொல்லப் போகும் அறிவுரை முக்கியமான ஒன்றாகும்.
குழந்தை பிறக்கப் போகும் சில வாரங்களுக்கு முன், குறைந்த அளவில் தலைமுடியை வெட்டுங்கள். இதனால் குழந்தை பிறந்த பின், கூந்தலைப் பராமரிக்க உங்களுக்கு போதிய நேரமும் சக்தியும் கிடைக்கும்.
கர்ப்பமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக சுறுசுறுப்பாக இருக்கக்கூடாது என்றில்லை. செய்ய வேண்டிய உடற்பயிற்சியை செய்து, சுறுசுறுப்பாக இருந்தால், பிரசவ காலத்தில் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பிரசவம் நடக்கும் கடைசி சில வாரங்களுக்கு முன், உங்களால் நடக்க மட்டுமே முடியும். ஆனால் நடைகொடுத்தால் சுகப்பிரசவம் நடப்பதால் அதில் ஒன்றும் தவறில்லை.
பிரச்சனை இல்லாமல் தாய்ப்பால் சுரக்க இதோ ஒரு டிப்ஸ்.
குழந்தை பிறந்த பின்பு கர்ப்ப காலத்தில் நீங்கள் உண்ட அதே உணவுகளை, பிரசவத்திற்கு பின்னும் தொடருங்கள்.
அது கஷ்டமாக தான் இருக்கும். முக்கியமாக உங்களுக்கு பிடிக்காத உணவுகளை உண்ணும் போது, இந்த கஷ்டங்களை அனுபவிக்கலாம்.
அதிலும் உடல் வெப்பம் அடையாமல் இருக்க, உங்களுக்கு பிடித்த உணவை எல்லாம் உண்ணாமல் இருந்திருக்கலாம். இவ்வகை உணவுகளை மெதுவாக சேர்க்க ஆரம்பியுங்கள்.
குறிப்பாக, குழந்தைக்கு வயிற்று பிரச்சனை இல்லை என்றால் மட்டும் அதனை தொடரலாம். ஒவ்வொரு பிரசவமும் மாறுபடும்.
மேலும் ஒவ்வொரு தாயும் ஒருவருக்கொருவர் வேறுபடுவர். உங்கள் கர்ப்ப காலம் அதிகரிக்க அதிகரிக்க, அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்து மத கலைக்களஞ்சியம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது!
இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து இந்தக் கலைக்களஞ்சியம் பேசுகிறது.
தவிர இந்து மதம் சார்ந்த இந்திய சரித்திரம், கலாச்சாரம், கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்திய பாரம்பரிய ஆய்வு அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்துகின்ற சித்தானந்த் சுவாமிகளின் முயற்சியில் இந்த கலைக்களஞ்சிய பணிகள் நடந்துள்ளன.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகம் இந்த திட்டத்துக்கு ஆதரவும் வசதிகளும் செய்துதந்திருந்தது.
இந்த கலைக்களஞ்சியத்தின் சர்வதேச வெளியீட்டு விழாவில் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி, அட்லாண்டா நகரிலுள்ள இந்திய தூதர் அஜித் குமார், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் அன்னா ஹசாரே உட்பட நூற்றுக்கணக்கான மத அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்குகொண்டிருந்தனர்.
இந்தியாவில் இந்த கலைக்களஞ்சியம் ஏற்கனவே தலாய் லாமா அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிசைனர் குஷனில் குஷியான லாபம்!
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மஞ்சுபாஷிணியின் வீட்டுக்குள் நுழைந்தால், திரும்பின பக்கமெல்லாம் அழகழகான குஷன்கள். சதுரமாக, வட்டமாக, இதய வடிவத்தில், திண்டு மாடலில்.... இன்னும் விதம்விதமான வடிவங்களில் அசத்தும் அத்தனையும் அழகு குஷன்கள்.
கார் வைத்திருப்பவர்களும், வீட்டை ஆடம்பரமாக வைத்திருப்போரும் மட்டும்தான் ஒரு காலத்தில் குஷன் உபயோகிப்பார்கள். இன்று வீட்டுக்கு வீடு அவற்றின் உபயோகத்தைப் பார்க்க முடிகிறது. ‘‘எம்.ஏ எகனாமிக்ஸ் படிச்சிருக்கேன். அடிப்படையில நான் ஒரு பியூட்டிஷியன். அழகு விஷயத்துல ஆர்வம் அதிகம். அழகழகான கைவினைப் பொருள்கள் பண்றதுலயும் ஈடுபாடு உண்டு. ஒருமுறை ஒரு கடையில குஷன் பார்த்தேன். அதோட நேர்த்தியும், டிசைனும் ரொம்பப் பிடிக்கவே, கத்துக்கிட்டு நானும் செய்ய ஆரம்பிச்சேன்.
குஷன்ல பொதுவா வட்டம், சதுரம், இதய வடிவம்னு குறிப்பிட்ட மாடல்கள் பலருக்கும் தெரியும். ஆனா கற்பனை வளம் இருந்தா, பதினஞ்சுக்கும் மேலான மாடல்கள் பண்ணலாம்’’ என்கிறார் மஞ்சுபாஷிணி. ‘‘சாதாரண தலையணையா உபயோகிக்கலாம். வீட்டுக்குள்ள அலங்காரப் பொருளா வைக்கலாம். கார் ஓட்டறவங்களுக்குப் பயன்படும். யாருக்கு வேணாலும் அன்பளிப்பா கொடுக்கலாம். சாட்டின், வெல்வெட், சில்க் காட்டன், காட்டன்... இப்படி எந்தத் துணியிலயும் பண்ணலாம்.
இது தவிர உள்ளே அடைக்க நைலான் பஞ்சும், கலர் நூலும், ஊசியும் மட்டும்தான் தேவை. வேகத்தையும், நேரத்தையும் பொறுத்து ஒரு நாளைக்கு 2 முதல் 3 வரை பண்ணலாம். தலையணைக் கடைகள், ஃபேன்சி ஸ்டோர், இன்டீரியர் டெகரேஷனுக்கான பொருள்கள் விற்கற கடைகள், கார் அலங்காரப் பொருள்கள் விற்கற கடைகள்ல ஆர்டர் எடுக்கலாம். வட இந்திய மக்கள் இதை அதிகமா பயன்படுத்தறாங்க. அவங்க அதிகம் வசிக்கிற ஏரியா கடைகள்ல இது நிறைய விற்பனையாகும். குறைஞ்சபட்சம் 200 ரூபாய்லேருந்து, அதிகபட்சமா 700 ரூபாய் வரைக்கும் விற்கலாம். வருஷம் முழுக்க தொய்வில்லாத பிசினஸ் இது’’ என்கிறார் மஞ்சு.
கற்பனையும் கைத்திறனும்: வீட்டுக்குள் மரம்!
என்னென்ன தேவை?
பிவிசி பைப் - 1 (விருப்பமான சைஸில் கட் செய்து வாங்கிக் கொள்ளவும்)
கயிறு - தேவையான அளவு
பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பவுடர் - 1 கிலோ (செராமிக் பவுடரும் பயன்படுத்தலாம்)
ஃபெவிகால் - 1 பாட்டில்
அக்ரிலிக் பெயின்ட் - (பிடித்த வண்ணங்களைத்
தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளவும்)
பிளாஸ்டிக் இலைகள் - தேவையான அளவு (கடைகளில் கிடைக்கும்)
மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி - 1
பிளாஸ்டிக் பூக்கள் - ஒரு கொத்து
கூழாங்கற்கள் - தேவைக்கேற்ப
பிரஷ் - 1.
“மிரட்டும் அலங்காரங்கள் வேண்டாம்... ஆடம்பரமான பொருள்களை அறைக்குள் திணித்து அடைக்க வேண்டாம்... கலைநயம் மிளி ரும் சின்னச் சின்னப் பொருள்கள் போதும்... கலையழகு வீட்டில் தாண்டவமாடும். அதற்கு நிச்சயம் உதவும் சிறிய செயற்கை மரம்! எளிய பொருள்களைக் கொண்டு இதை நீங்களே செய்யலாம்” என்று உற்சாகம் தருகிறார் சென்னையில் வசிக்கும் லதா அருண்கு மார். கூடவே, செயற்கை மரம் தயாரிக்கும் வழிமுறையை எளிமையாக விவரிக்கிறார் இங்கே...
எப்படிச் செய்வது?
பிவிசி பைப்பில் ஃபெவிகாலை முழுமையாக தடவிக் கொள்ளவும். அதில் கயிறை வட்டவடிவமாக சுற்றவும். பைப்பின் முக்கால் பாகம் வரை சுற்றினால் போதும்.
ஒரு பாத்திரத்தில் அல்லது பக்கெட்டில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பவுடரை கொட்டி அதில் தேவையான அளவு தண்ணீர் கலந்து பிசையவும். கரைசல் தோசை மாவு பதத்துக்கு இருக்க வேண்டும்.
இந்தக் கரைசலை கயிறு சுற்றிய பைப்பில் முழுவதும் தடவவும். கயிறு வெளியே தெரியாத அளவுக்கு அடர்த்தியாக பூச வேண்டும். சிறிது நேரம் உலர வைத்தால் கலவை பைப்புடன் இறுக ஒட்டிக் கொள்ளும்.
பிளாஸ்டிக் தொட்டி யிலும் கரைசலை தேவையான அளவு போட்டு, அதில் பைப்பை நடுவில் வைக்கவும். பைப்பை குச்சியால் கீற வும். இப்படிக் கீறுவது மரம் போன்ற தோற்றத்தைத் தரும்.
கலவை நன்கு உலர்ந்ததும் உங்களுக்குப் பிடித்த வண்ணங்களைக் கொண்டு பெயின்ட் அடிக்கவும்.
பெயின்ட் உலர்ந்ததும் பைப்பின் மேல் பகுதி யில் செயற்கை மலர் களால் அலங்கரிக்கலாம்.
விரும்பினால் பிளாஸ்டிக் இலைகளை பைப்பின் மீது சுற்றலாம். அவ்வளவுதான்... அழகான செயற்கை மரம் ரெடி! அழகுக்கு அழகு சேர்க்க பூத்தொட்டியில் கூழாங்கற்களை போடலாம். இம்மரத்தை வீட்டு வரவேற்பறையில் வைத்தால் பார்ப்பவர்களை சுண்டி இ ழுக்கும். தண்ணீர் படாமல் பார்த்துக் கொண்டால் போதும். நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும். பிளாஸ்டிக் பூக்களுக்கு பதி லாக ரோஜா போன்ற நிஜப்பூக்களை வைத்தால் அழகு அள்ளும்!
பிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.!
புரோகிராம் லாங்குவேஜ் ( Programming Language ) முதல் அனிமேசன் மென்பொருட்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முதல் ஒவ்வொரு மென்பொருட்களிலும் திறமையானவர்களாக நம்மை மாற்ற இலவசமாக பயிற்சி கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினியில் ஜாவா மொழி படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை செலவிட்டால் தான் படிக்க முடியும் என்பதில்லை , நம்மிடம் கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் ஆன்லைன் மூலம் இன்றைக்கு அதிகமாக காசு வசூலிக்கும் கணினி பயிற்சிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே இலவசமாக கற்கலாம் அத்தனை பயிற்சிகளையும் தன்னகத்தே கொண்டு ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.good-tutorials.com
CSS, Flash , HTML , Illustrator, JavaJavaScript , Maya ,Photography , Photoshop, PHP , Ruby ,Ruby on Rails , 3ds Max , ஜாவா முதல் பிஎச்பி வரை அனிமேசன் மென்பொருளில் பிஷாஷ்-ல் தொடங்கி மாயா வரை அனைத்து மென்பொருள்களின் பயிற்சியையும் ஆரம்பம் முதல் நம்மை திறமையானவர்களாக மாற்றும் அத்தனை பயிற்சியும் இங்குள்ளது. ஸ்டூடியோ மேக்ஸ் , மாயா போன்ற மென்பொருட்களின் பயிற்சிக்கெல்லாம் சராசரியாக 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை செலவாகிறது , எந்தவிதமான பணச்செலவும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே கற்கலாம், நாம் விரும்பும் நேரத்தில் விரும்பும் மென்பொருளின் பயிற்சியை அளிக்க இந்தத்தளம் பலவிதமான பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நாம் முறையாக பயிற்சியை மேற்கொண்டால் எந்த மென்பொருளிலும் திறமையானவர்களாக மாறலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு கணினி படித்தவர்களுக்கும் அனிமேசன் படிக்க விரும்புபவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பால் பாயசம்! - சமையல்!
என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர்,
பச்சரிசி நொய் - 1/4 கப்,
சர்க்கரை - 300 கிராம்,
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை,
முந்திரி, திராட்சை - அலங்கரிக்க,
குங்குமப்பூ - சிறிது,
நெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
பாலில் சிறிது தண்ணீர் விட்டு நொய் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். பாலில் வெந்த நொய்யில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும். நெய்யில் ஏலக்காய், முந்திரி, திராட்சை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். குங்குமப்பூ வேண்டுமென்றால் கையால் நொறுக்கிச் சேர்க்கவும். சுலபமான, சுவையான பால் பாயசம் ரெடி.
குளு..குளு..கொடைக்கானல்..! - சுற்றுலாத்தலங்கள்!
|
மானும்..ஓநாயும் (நீதிக்கதை)!
ஒரு ஊரில் மான் கூட்டம் ஒன்று வசித்து வந்தன.அவற்றுள் ஒரு சின்ன மான் மிகவும் புத்திசாலியாய் இருந்தது.
அதே நேரம் தன் புத்திசாலித்தனத்தைக் கண்டு மற்ற மான்களிடம் சற்று கர்வமாகவே நடந்துவந்தது.
ஒரு நாள் எல்லா மான்களும் மேய்ச்சல் முடிந்து திரும்புகையில் இருட்ட ஆரம்பித்தது..ஆனால் அப்போதும் அந்த
சின்ன மான் திரும்ப வரவில்லை..
'இருட்டில் எந்தமிருகமாவது வந்து உன்னை அடித்து உண்டு விடும்'என்று வயதான மான் ஒன்று அறிவுரை கூறியும்
சின்ன மான் கேட்கவில்லை..'சரி' என மற்ற அனைத்து மான்களும் திரும்பின..
அந்த நேரம் அங்கு வந்த ஒரு ஓநாய் ஒன்று சின்ன மான் தனியாய் இருப்பதைப் பார்த்து ...அதை கொன்று உண்ண விரும்பியது..
உடன் சின்ன மான் புத்திசாலித்தனமாக' என்னை நீ உண்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை..ஆனால் அதற்கு முன் உன் இனிய குரலில்
பாட்டு ஒன்று கேட்க ஆசை'என்றது.
ஓநாயும் சின்ன மானின் கடைசி விருப்பத்தை கேட்டுவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தில் தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.
அதன் குரல் கேட்ட வேட்டைக்காரர்கள் சிலர் அங்கு ஓடி வந்து ஓநாயை கொன்றனர்.
சின்ன மான் உயிர் தப்பியது.
கர்வம் இல்லாமல் ...மூத்த மான் சொன்ன அறிவுரையை கேட்டிருந்தால் சின்ன மானுக்கு இந்த நெருக்கடி வந்திருக்காது.
ஓநாயும் தன் கொடூரக்குரலை பற்றி புரிந்துகொண்டு பாடாமல் இருந்திருந்தால் இறந்திருக்காது.
Subscribe to:
Posts (Atom)