இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக்கு பிறகு, தங்களின் உடல் உருமாற்றத்தை பார்த்து பல பெண்கள் பதட்டத்துக்கு ஆளாகின்றனர்.
மெல்லி இடைக்கான சிறப்பு பயிற்சி இதோ... முதலில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில் கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவாக மூச்சை உள் இழுத்தபடி உடம்பை மேலே உயர்த்தவும்.
முகத்தை இடது பக்கம் திருப்பி, வலது கால் பாதத்தை பார்க்கவும். பத்து எண்ணும் வரையில் அதே நிலையில் இருக்கவும். மூச்சை வெளியே விட்டபடி திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல் மூசசை உள் இழுத்தபடி வலது பக்கம் திரும்பி இடது கால் பாதத்தை பார்க்கவும்.
பத்து எண்ணியவுடன் மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதுபோல் தொடர்ந்து 10 முறை செய்யவும்.
பலன்கள்:
முதுகு வலி நீங்கும். முதுகுதண்டு வலுப்பெறும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். மலச்சிக்கல் குணமாகும். வயிற்று பகுதியில் சதை நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும். தைராய்டு பிரச்சனைகளுக்கு இந்த பயிற்சி ஏற்றது.
No comments:
Post a Comment