மது அருந்துபவர்கள் கல்லீரலின் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கிறார்கள். மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும். இந்த கல்லீரல் மற்ற எல்லா உறுப்பகளையும் விட அதிகமான பணிகளைச் செய்கிறது. 500 வேலைகளைச் செய்கிறது 1000 க்கும் மேற்பட்ட என்சைம்களை உருவாக்குகிறது.
உங்கள் தாய், தகப்பன், மனைவி, குழந்தைகள் இவர்கள் அனைவரையும் விட உங்கள் மேல் அக்கறை உள்ள ஒருவர் உண்டென்றால், அது லிவர் எனப்படும் கல்லீரல் மட்டுமே.
முடி கொட்டிவிடுமே என்று கவலைப்படுகிற அளவுகூட கல்லீரல் கெட்டுவிடுமே என்று கவலைப்படாமல் இருப்பவர்களைக் கண்டால் வேதனையாக இருக்கிறது. சில கல்லீரலின் பணிகளைச் சொல்கிறேன் கேளுங்கள்.
உங்கள் கையில் ஒரு பிளைடு அறுத்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம், உடனே கல்லீரல் என்ன செய்யும் தெரியுமா பதறிப்போய் அந்த இடத்துக்கு Prothrombin என்ற இரசாயனத்தை அனுப்பிவைக்கும். அந்த இரசாயனம் இரத்தத்தை உறையச்செய்து இரத்தப் போக்கை நிறுத்தும். கல்லீரல் மட்டும் அந்த இரசாயனத்தை அனுப்பவில்லை என்றால் அந்த சிறு காயமே போதும் உங்கள் முழு இரத்தமும் வெளியேறிவிடும். கல்லீரல் கெட்டுப் போனால் அதுதான் நடக்கும்.
பிறகு நீங்கள்(குடிப்பவர்கள்) போனால் போகட்டும் போடா என்று பாடிக் கொண்டே போய்விட வேண்டியதுதான். அது மட்டுமா இப்போதெல்லாம் எதெற்கெடுத்தாலும் மத்திரைதான் ஒரு சிறு தலைவலி என்றால் கூட உடனே மெடிக்கலுக்கு ஓடிப்போய் ஒரு மாத்திரையை வாங்கி உள்ளே தள்ளிவிட வேண்டியது.
இப்படி கண்ட கண்ட மாத்திரைகளை உள்ளே தள்ளுவதால் மாத்திரையிலுள்ள விஷத்தன்மை நம் உடலை பாதிக்கா வண்ணம் கல்லீரல் அந்த விஷத்தன்மையை முறிக்கிறது. அப்படி அது செய்ய வில்லை என்றால் விஷத்தன்மை நேராக இதயத்துக்குச் சென்று இதயத்தை செயலிழக்கச் செய்துவிடும். பிறகு இதயமே இதயமே என்று ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்.
''எவ்வளவு குடித்தாலும் ஸ்டெடியாக இருப்பேன்'' அட மரமண்டைகளா நீங்கள் குடிக்கும் மதுவின் விஷத்தன்மையை முறிக்க கல்லீரல் இரவு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறது. அதுக்கு அதிகமாவேலையைக் கொடுத்து அது கெட்டுப் போச்சுன்னா அப்புறம் நீ ஸ்டெடியா மூச்சுகூட விட முடியாது.
''கல்லீரல் என்பது கழுதை. பாரம் சுமக்கும். படுத்தால் எழாது''. இதையும் நான் சொல்லவில்லை. ஐயா வைரமுத்து அவர்கள் குடியால் கெட்டுப்போய் மாய்ந்து போகிறவர்களைக் கண்டு வேதனையோடு சொன்னது.
No comments:
Post a Comment