Search This Blog

Friday, 29 November 2013

மனம் கவலையான நேரத்தில்!

"மனசு ரொம்ப கனமா இருக்கு, என்ன செய்யுறதுன்னு தெரியலே" என்ற வார்த்தைகளையே நாம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த உணர்வு நாம் எல்லோரும் எதோ ஒரு கட்டத்தில் அனுபவித்திருக்க கூடியது தான். வாழ்க்கையில் இறுக்கமான கட்டங்கள் (மன வேதனையான) ஏற்படும்.


சிலருக்கு எவ்வளவு சிரமமான சிக்கலும் இறுக்கம் தராது. ஒருவரது வாழ்வில் இறுக்கமான பாதிப்புகளையும் மனநோயையும் அடைய அதிகம் வாய்ப்புள்ளது. அந்த பட்டியலில் திருமணம்,தொழில்,காதல்,உறவுகள்,நிகழ்வுகள்,இழப்பு போன்ற சோகமான கட்டங்களும் உண்டு. பலர் சோகமான மோசமான நிகழ்வுகளே வாழ்வில் இறுக்கம் என்று கருதுகிறார்கள். மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட இறுக்கத்தை ஏற்படுத்தும்.


இறுக்கம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகி விட்டது. "வெளியே சொல்லவும் மொழியில்லை.வேதனை திறவும் வழியில்லை" என்ற அழுவதே ஆறுதல் தரும். "அழுதுவிடு" என்று சொல்வது அவமானம் படுத்துவதாக ஆகாது. குமறி குமறி உணர்ச்சிகளை அடக்கி உள்ளே வெடிப்பதை விட,பாதி சோகத்தையாவது கண் வழியே இறக்கி வைப்பது நல்லது.


அழுது முடிந்ததும் ஏற்படும் அமைதியை நாம் எல்லோரும் அனுபவித்திருப்போம். இந்த அமைதி மனதின் பாரம் குறைதத்தினால் வரும் பாதி நிம்மதி. "இவ்வளவு வயசாச்சு இன்னும் அழுரிய" என்ற கேலிக்கு பயப்படுபவர்கள், தனியாகவும் அழலாம். இதை தவிர,சிரிக்க தெரிந்தவனுக்கு பாதி விஷயங்கள் சிக்கலாக தெரியாது.


இறுக்கம் என்பது வாழ்க்கையின் அங்கம். நாம் இப்படித்தான் இயங்குகிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் எப்படி இயங்கினாலும் சிறப்பை இருக்கும். சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கை அழகா அமையும்.

No comments:

Post a Comment