மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாமல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கான இதமான வழியை பேர்ட்சாங்.எபெம் இணையதளம் வழங்குகிறது. எப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பணி சோர்வில் ஆழ்த்துகிறதோ அப்போதெல்லாம் இந்த தளத்தின் பக்கம் போனால் போதும் பின்னணியில் இனிமையான பறவைகள் சங்கீதத்தை கேட்டு ரசிக்கலாம். அப்படியே அந்த இனிய ஒலிகளை கேட்டு ரசித்தபடி எதோ பசுமையான மரங்கள் அடர்ந்த சூழலில் இருப்பது போன்ற உணர்வில் மிதக்கலாம்.
இந்த உணர்வு தரும் உற்சாகத்தோடு மீண்டும் பணியில் மூழகலாம்.இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியோடு எளிமையாக காட்சி தரும் இந்த தளத்தில் கொஞ்சம் கவனமாக பார்த்தால் கூடுதலாக பல வசதிகள் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்தால் பறவைகள் ஒலிகளுக்கான பிரத்யேக கூட்டில் இருந்து ஒலிகளை பெற முடியும். இந்த ஒலிகளை எம்பி3 கோப்புகளாகவும் தரவிறக்கம செய்து கொள்ளலாம்.இதே போல ஸ்மார்ட் போன்களுக்கான செயலியாகவும் தரவிறக்கம் செய்யலாம்.
ஐடியூன்ஸ், சவுன்ட் கிளவுட் உள்ளிட்ட சேவைகள் வாயிலாகவும் பறவைகள் சங்கீத்ததை கேட்க முடியும்.அப்படியே நீங்கள் கேட்டு ரசித்த ஒலிகளை பேஸ்புக் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.
பறவைகள் பாடல்களை கேட்டு ரசிக்க: http://birdsong.fm/
No comments:
Post a Comment