சாம்பானர்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க்! அழகு தமிழில் சொன்னால் சாம்பானர்- பாவாகத் தொல்லியல் பூங்கா!. குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் தகதகத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம். சுமார் 800மீட்டர் உயரம் கொண்ட பாவாகத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகத் என்றழைக்கப்-படுகிறது. மலை உச்சியில் உள்ள காளிக்கமாதா கோவில் மிகவும் பிரசித்தம். அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 - 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும். சோலங்கி மன்னர்கள், பிறகு கிக்சி சவுகான்கள் வசம் இருந்து வந்த இந்தப்பகுதியை குஜராத் இளம்சுல்தானாக விளங்கிய மஹமூத் பகாடா 1484ம் ஆண்டு கைப்பற்றியுள்ளார். சாம்பானார் பகுதியை புனரமைத்து நூற்றுக்கணக்கான புதிய கட்டங்களை எழுப்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்டது 23ஆண்டுகள். மேலும் இந்தப்பகுதிக்கு முகம்மதாபாத் எனப் பெயரிட்டு அவுரங்காபாத்தில் இருந்து தலைநகரத்தை சாம்பனாருக்கு மாற்றியிருக்-கிறார். இப்படி அழகு பார்த்து அமைத்த சாம்பனார் பகுதி, 1535ம் ஆண்டில் மொகலாய மன்னர் ஹுமாயூன் வசம் சென்றிருக்கிறது.
இப்படியாக, பல வரலாற்றுப்-பக்கங்களை வசப்படுத்தி-யிருக்கும் சாம்பனார்- பாவாகத்தில் தற்போது எஞ்சி நிற்பது காளிக்கமாதா கோவில், ஐந்து மசூதிகள், மற்றும் சில கட்டடங்கள் மட்டுமே. இந்து, முஸ்லிம் கட்டடக் கலாச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் சாம்பனார்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க், 2004ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பண்பாட்டுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பிடித்தது.
எப்படிப் போகலாம்?
குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் இது அமைந்திருப்பதால் நல்ல சாலை வசதியைக் கொண்டுள்ளது. ரயிலில் செல்பவர்கள் கோத்ரா ரயில்நிலையத்தில் இறங்கி அங்கிருந்து போகலாம். வடோதராவில் விமானநிலையம் அமைந்திருக்கிறது. பாவாகத் மலைக்கோவிலுக்கு ரோப்கார் வசதி உள்ளது. அதில் பயணிப்பது புதுமை அனுபவம். |
No comments:
Post a Comment