விநாயகர் சதுர்த்தி பண்டிகை நம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருக்கின்றன. விநாயகருக்காக எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பது பற்றி சில யோசனைகள்;
ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் அதிகாலையில் எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட வேண்டும்.
பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். புதிய களிமண் பிள்ளையாரை அரிசிக்கு நடுவில் வைக்க வேண்டும்.
அதன் பின் அருகம்புல்லோடு இலை, பூக்களோடு பிள்ளையாருக்கு பிடித்த வன்னி, மந்தாரை இலைகளோடு விநாயக சதுர்த்தி அன்று அர்ச்சிக்க வேண்டும்.
பிள்ளையாருக்கு அருகில் ஒரு செம்பில் நீர் நிரப்பி வைத்து அதன்மேல் மா இலை, தேங்காய் வைத்து கும்பமாக அலங்கரிக்க வேண்டும்.
விளக்கேற்றி வைத்து கொழுக்கட்டை, பழங்கள், சுண்டல் உள்டப பல பொருட்களை வைக்கவேண்டும். எல்லாம் தயாரானதும் பிள்ளையாருக்கு அருகு சாத்திவிட்டு அதன் பிறகு எருக்கம் பூ மாலை, வன்னி, மந்தாரை பத்திரம் எல்லாம் சாத்த வேண்டும்.
பின்னர் கணபதியின் மூல மந்திரமான ஓம், ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதியே வரவரத ஸர்வஜனம்மே வஸமானய ஸ்வாஹா என்று 51 முறை சொல்ல வேண்டும்.
பின்னர் உங்களுக்கு தெரிந்த விநாயகர் துதிகளை சொல்லி முடிவில் தூபம், தீபம், நிவேதனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். இப்படி பூஜை செய்கிற வரைக்கும் உபவாசம் இருப்பது நல்லது.
ஒரு நாள் மட்டும் விநாயகர் சதுர்த்தி விரதம் இருக்கிறவர்கள் அன்று மாலை நிலவு வந்ததும் சந்திரனை பார்த்து விட்டு பிள்ளையாரை வணங்கவேண்டும். அப்படி செய்தால் விரதம் முழுமையாக பூர்த்தியாகும்.

No comments:
Post a Comment