Search This Blog

Showing posts with label அனுபவம்!. Show all posts
Showing posts with label அனுபவம்!. Show all posts

Thursday, 12 June 2014

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்!

 

பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

மெலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

Monday, 6 January 2014

ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி...





உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி

கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம்.

சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்
தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது. இதை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

Sunday, 5 January 2014

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!!!



நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

பால்

பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உணவிற்கு பின்பு டெசெர்ட்

உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்

மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்

உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்



இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘வைபை’ வசதி கிடைத்து விடும்.

அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு
விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.

ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘வைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த‘வைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும்.

 அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘வைபை’அறிமுகம் செய்யப்படுகிறது.

வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது.

மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘வைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.

சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘வைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்..



ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக்கமாகவும் மற்றும் பாதங்களுக்கிடையில் காற்று போய் வர போதிய இடைவெளி இல்லாதவாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால்களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது.

* கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.

* நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து,கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன

* குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்துவிடக் கூடாது. குளிக்கும் போது உடல் அழுக்கினை நீக்கவும், உடல் துர்நாற்றத்தை நீக்கவும் சோப்புகளை பயன்படுத்துவோம். அவற்றையே கால் நகங்களை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்த ஏன் யோசிக்க வேண்டும்? அவ்வாறு மென்மையான சோப்பினை பயன்படுத்தும் போது, நகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.

* நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும்

நெ‌ட் பை‌த்‌தியமா..? ‌சி‌கி‌ச்சை தேவை..! - ''மனோதத்துவம்''



பலரு‌ம் க‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்தா‌ல் உலகமே மற‌ந்து போ‌ய்‌விடு‌கிறது எ‌ன்று ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க் கூறு‌ம் கால‌ம் போ‌ய், க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது.

இ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை.

இணைய‌ம் ப‌ற்‌றி வகு‌ப்பு எடு‌த்து ச‌ம்பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு இப‌்போது வேலை இ‌ல்லை. அ‌ந்த ‌நிலை மா‌றி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.

எப்போதும் இணைய‌த்‌தி‌ல் எதையாவது செ‌ய்து கொ‌ண்டு க‌ணி‌னி முன் ‌சிலையாக‌க் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடி‌க்ச‌ன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.

இதுபோன்றவ‌‌ர்களு‌க்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இ‌ந்த ‌சி‌கி‌ச்சை‌க்கு பெ‌ய‌ர் எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ‌ரீ-‌ஸ்டா‌ர்‌ட் எ‌ன்பதுதா‌ன். க‌ணி‌னியா‌ல் ஹே‌ங்‌க் ஆ‌‌கி‌ப் போனவ‌ர்களு‌க்கு ரீ-ஸ்டார்ட் எ‌ன்ற இ‌ந்த ‌சி‌கி‌ச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.

இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மரு‌த்துவ‌ர் லாரி கேஷ் கூறுகையில், இணைய‌ம் துவ‌ங்‌கிய‌ப் ‌பிறகு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளு‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டன. சமூக மா‌ற்ற‌ங்களு‌ம் ஏ‌ற்ப‌ட்டுவ‌ி‌ட்டன. இ‌தி‌ல் இணைய‌த்தை ஒரு வரைமுறை‌யி‌ல் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌ப்‌பி‌க்‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி த‌ப்‌பி‌க்க முடியாதவ‌ர்களு‌க்கு இ‌ங்கு ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

இ‌ந்த மைய‌த்‌தி‌ல் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், ‌வீடியோ/க‌ணி‌னி ‌விளையா‌ட்டுக‌ளி‌ல் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடை‌ப் ப‌யி‌ற்‌சி, கல‌ந்தா‌‌ய்வு என பல க‌ட்ட ‌சி‌கி‌ச்சைக‌ள் உண்டு. இத‌ற்கென உ‌ள்ள சிகிச்சை நிபுணர்கள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களை‌த் த‌னி‌த்த‌னியாக கவ‌னி‌க்‌கிறா‌ர்க‌ள்.

ஆனா‌ல் நெ‌ட் பை‌த்‌திய‌ம் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு முழு‌ப் பை‌த்‌திய‌ம் ஆ‌கி‌விடு‌ம், இத‌ற்கான க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்டா‌ல். ஆ‌ம்.. ஒ‌ன்றரை மாத‌த்‌தி‌ற்கு அதாவது 45 நா‌‌ட்களு‌க்கு ரூ.6.75 ல‌ட்சமா‌ம்.

அ‌ம்மாடியோ‌வ்…
இ‌ந்த க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்ட ‌பிறகு தலை லேசாக சு‌ற்று‌ம். எனவே ‌நீ‌ங்களாகவே நெ‌‌ட்டி‌ல் இரு‌ந்து ‌ஓரள‌வி‌ற்கு ‌வில‌கி‌க் கொ‌ள்ளலா‌ம் அ‌ல்லவா? அத‌ற்காக எ‌ங்க‌ள் இணைய‌ தளத்தை‌ப் பா‌ர்‌ப்பதை த‌வி‌ர்‌க்க வே‌ண்டா‌ம். அதை‌ப் பா‌ர்‌த்தா‌ல்தானே இ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌பிர‌ச்‌சினை இரு‌க்‌கிறது எ‌‌ன்று உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரிய வரு‌ம். எ‌ன்ன நா‌ன் சொ‌ல்வது?

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!


நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,

1. உட்காரும் தோரணை

அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி
கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

3.உணவு முறை:

பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

4. வைட்டமின்கள்:

 கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

5. தாதுக்கள்:

 எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

6. சூடான குளியல்:

 வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

7. சப்ளிமென்ட்ஸ்:


 நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

8. மசாஜ்: 

வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

9. கடுகு எண்ணெய்:

 எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

10.ஆரோகியமான சூழ்நிலை:

 சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!


ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!


தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கிலோ

மட்டன் - 1/2 கிலோ

நெய் 250 கிராம்

தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)

பூண்டு - 100 கிராம்

இஞ்சி - 75 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்

பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 50 கிராம்

எலுமிச்சை - 1

பொதினா, கொத்தமல்லிதழை - கையளவு

கேசரிப்பவுடர் - சிறிதளவு

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

 
சமையல் குறிப்பு விபரம்:

செய்வது: எளிது

நபர்கள்: 4

கலோரி அளவு: NA

தயாராகும் நேரம்: 15 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)



முன்னேற்பாடுகள்:

1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்

3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.


செய்முறை:

1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்

2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்

3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்

6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்

8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்

9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்

10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்

11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.


பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

பாஸ்வேர்டு ; இதையெல்லாம் செய்யாதீர்கள்...!



நல்ல பாஸ்வேர்டை உருவாக்க விரும்பினால் இவற்றை எல்லாம் நினைவில் கொள்ளுங்கள்:-

1. வெற்று பாஸ்வேர்டை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள்.

2. பயனர் பெயரும் பாஸ்வேர்டும் ஒன்றாக இருக்க கூடாது.

3. எவருடைய பெயரையும் , அது கற்பனை பெயராக இருந்தாலும் அதை பாஸ்வேர்டாக பயன்படுத்த கூடாது.

4. நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயரை பாஸ்வேர்டாக்க வேண்டாம்.

5. போன் நம்பர், லைசன்ஸ் எண், அடையாள அட்டை எண ,இவை எதுவுமே பாஸ்வேர்டாக கூடாது.

6.யாருடைய பிறந்த நாள் தேதியும் பாஸ்வேர்டாக வேண்டாம்.

7. ஒரே எழுத்தை திரும்ப திரும்ப எழுதுவது, அவற்றுடன் இரண்டு எண்களை சேர்ப்பது போன்ற உத்திகளும் பயன்படுத்த ஏற்றவை அல்ல.

8. எல்லா தளங்களுக்கும் ஒரே பாஸ்வேர்ட் வேண்டாம்.

9. பாஸவ்ர்டை யாரிடம் சொல்லாதீர்கள். உங்கள் மனைவிடமும் கூட . காதலியிடம் வேண்டவே வேண்டாம்.

10. பாஸ்வேர்டை காகிதத்தில் குறித்து வைக்காதீர்கள். அப்படியே குறித்து வைத்தாலும் கம்ப்யூட்டர் பக்கத்தில் வைக்காதீர்கள்.

இந்த கட்டளைகள் எல்லாம் எதற்கு என்றால் முடிந்த வரி உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர்களால் யூகிக்க முடியாயவையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்.

குளிர் காலத்தில் வீட்டில் வளர்க்கும் பறவைகளை பாதுகாக்க சில டிப்ஸ்...



குளிர் காலம் என்பது உங்களுக்கும் உங்களை சார்ந்த செல்லப் பிராணிகளுக்கும் சிறிது கடினமான காலம் தான். செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் எவரும் இந்த காலத்தில் பிராணிகளை பராமரிப்பது குறித்து பல பேரிடம் பேசி மற்றும் பல விஷயங்களை சேகரித்து வைத்திருப்பார்கள். முக்கியமாக நீங்கள் வைத்திருக்கும் பறவைகளுக்கு இந்த பனி காலத்தில் கொஞ்சம் கூடுதலான அக்கறை தேவைப்படுகின்றது.
 


 உங்களை நாடி வரும் பறவையாக இருந்தாலும் சரி, உங்கள் வீட்டு கூண்டுகளில் வைத்திருக்கும் பறவையாக இருந்தாலும் சரி இரண்டிற்கும் பராமரிப்பு அவசியம் தேவைப்படுகின்றது. கூட்டுக்குள் இருக்கும் பறவைகளை நாம் வீட்டிற்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் தோட்டங்களில் வாழும் பறவைகளின் சூழல் சற்றே மாறுபட்டது. இவ்வாறு தோட்டத்தில் வாழும் பறவைகளை பாதுகாப்பது எப்படி? காலத்தின் மாற்றத்தை சமாளிக்க அவைகள் பெரும் அவதிப்படுகின்றன. நாம் அவற்றை கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்.

இத்தகைய தோட்டத்துப் பறவைகளை கூட்டிலிருக்கும் பறவைகளோடு ஒப்பிடும் போது நாம் அதிக கவனத்துடன் மற்றும் கூடுதல் அக்கறையுடனும் குளிரிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். அவற்றிற்கு தேவையான உணவு, உறைவிடம், குளிர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் மற்றும் அதற்கு ஏதேனும் குஞ்சுகள் இருந்தால் அவற்றையும் பார்த்துக் கொள்வது போன்றவற்றை நாம் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.

 குளிர் காலத்தில் கூடுதல் அக்கறையுடன் செல்லமாக வளர்க்கும் பறவைகளை பாதுகாப்பதும் சிறிது கடினமான விஷயம் தான். நாம் இதற்காக ஒரு சில குறிப்புகளை தெரிந்து கொண்டால் இதையும் எளிதாக செய்து விட முடியும். பின்வரும் பகுதியில் இத்தகைய பறவைகளை குளிர்காலத்தில் பாதுகாப்பது எப்படி என்று சொல்லப்பட்டுள்ளது. இதை நாம் கூட்டிலுள்ள பறவைகளுக்கும் தோட்டத்துப் பறவைகளுக்கும் பயன்படுத்த முடியும். இந்த குறிப்புகளை நாம் பின்பற்றுவதன் மூலம் நமது பறவைகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வகையில் பாதுகாக்க முடியும்.

வீட்டிற்குள் இருக்கச் செய்யுங்கள்: பனி மற்றும் குளிர்ந்த காற்று வீசும் இந்த காலத்தில் எந்த ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பவரும் அதை வெளியே இருக்க விட மாட்டார்கள். உங்கள் வீட்டு பிராணிகளும் இதையே எதிர்பார்க்கும். பறவைகளை வீட்டிற்குள் வைப்பது தான் அவைகளுக்கு இதமூட்டும். ஒரு வேளை தோட்டத்தில் இருக்கும் பறவைகளாக இருந்தாலும் அவற்றையும் தற்காலிகமாக உள்ளே வைப்பது சிறந்ததாகும்.

அறை வெப்பநிலையை நிலைப்படுத்துங்கள்:
வீட்டிலிருக்கும் பறவைகளை அறைக்குள் இருக்கும் வெப்பநிலைக்கு எப்போதும் வைத்திருப்பது அவசியமானதாகும். இதற்காக ஹீட்டரை பயன்படுத்தலாம். பறவைகள் இருக்கும் இடத்தில் ஈரப்பதத்தை மேம்படுத்துவதும் மிகவும் முக்கியமாகும். வறண்ட காற்று பறவைகள் மேல் அதிகம் பட்டால் அவைகளின் சீத மென்படலம் பாதிக்கப்படுகின்றது.

 ஈரப்பதத்தை மேம்படுத்துங்கள்: குளிர்காலத்தில் அறையை சூடுபடுத்தும் ஹீட்டர்கள் அறையின் காற்றை வறண்ட நிலைக்கு கொண்டு செல்கின்றன. வீட்டில் இருக்கும் பறவைகளை கொஞ்சம் நீராவியை நுகரச் செய்ய வேண்டியதும் அவசியமாகும். நீங்கள் ஒரு சூடான குளியலை அனுபவிக்கும் போது இந்த குருவிக்கூட்டையும் குளியல் அறையின் ஓரத்தில் வைத்தால் அதற்கும் இதமாக இருக்கும்.

குடிநீரை அவ்வப்போது மாற்றுவது: குளிர் காலத்தில் நாம் பறவைகளுக்கு கொடுக்கும் தண்ணீர் குளிர்ந்து போகிறது. அவைகளுக்கும் குளிர்ந்த நீரை அருந்துவது கடினமாக இருக்கும். ஆகையால் அவ்வப்போது பறவைகள் குடிப்பதற்காக வைக்கும் நீரை மாற்றுவது அவசியமானதாகும். மாற்றும் போது கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை கொடுக்கவும்.

உணவு: தோட்டத்து பறவைகளை குளிர் காலத்தில் பராமரிக்கும் போது நாம் அதற்கு போதுமான அளவு உணவு கொடுக்க வேண்டும். குளிர் காலத்தில் தோட்டத்து பறவைகளுக்கு இயற்கை உணவு கிடைப்பது கடினமாக இருக்கும். ஆகையால் அவைகளுக்கு தேவையான சக்தி கொடுக்கும் வண்ணம் நாம் படைக்கும் உணவு இருத்தல் வேண்டும்.

 சூடான குளியல்: பொதுவாக பறவைகளுக்கு தண்ணீரில் விளையாடுவது பிடித்த விஷயமாக அமைகின்றது. ஒரு வேளை உங்கள் பறவைக்கும் இது பிடித்தமான செயலாக இருந்தால் அதற்கு ஒரு சிறிய சூடான குளியலை கொடுப்பது சிறந்த திட்டமாகும். ஆனால் குளித்தவுடன் உடனடியாக அதை உலர வைக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். குளிப்பதால் அந்த பறவை அதற்கு தேவையான ஈரப்பதத்தை பெறுகிறது.

 அறையை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கவும்: வீட்டுப் பறவைகளை நாம் கூட்டிற்குள் வைக்காவிடில் அவற்றை நாம் சற்றே கூடுதல் அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எரிவாயு, மின் சாதன பொருட்கள் ஆகியவை பறவைக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டியது இதில் கவனிக்க வேண்டிய விஷயமாக அமைகின்றது.

கம்ப்யூட்டர் பராமரிப்பு..!




நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் “”தினமும் என்னைக் கவனி” என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.

4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.

5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.

6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.http://www.revouninstaller.com/என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.

7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.

8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர் களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம். என் கம்ப்யூட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்திடாமல் நன்றாக இயங்கிக் கொண்டு தான் உள்ளது.

Saturday, 4 January 2014

பனியில் இருந்து குழந்தைகளை காக்க சூப்பர் டிப்ஸ்...


சுள்ளெனக் கொளுத்தும் வெயிலையும், சடசட மழையையும் தாங்கி கொள்ளலாம். அதுவும் எலும்பை ஊடுருவும் கார்த்திகை, மார்கழிப் பனியை கண்டால் பயப்படுவோம். மழையும் குளிரும் வாட்டும் இந்த காலக்கட்டங்களில் காய்ச்சலும் சளித் தொந்தரவும் எளிதில் வந்துவிடும்.

உதடுகளில் வெடிப்பு, கை, கால்களில் வறட்சி ஏற்படும். இதற்காக நாம் கவலைப்பட வேண்டாம். நாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் பனியும் குளிரும் நம்மை எதுவும் செய்யாது.

ஒரே சீரான தட்ப வெப்பநிலை இல்லாமல் வெப்பமும் பனியும் கலந்து இருக்கும் நாட்களில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும். பனிக்காலத்தில் ஏ டிபிக்கல் வகை வைரஸ் அதிகமாக தாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் தாக்கினால் 10 முதல் 13 நாட்கள் வரை வலி நீடிக்கும். சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் நமது

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து வருவதுதான் இதற்குக் காரணம். இந்த வைரஸ் குழந்தைகளையும், வயதானவர்களையும்தான் அதிகம் தாக்குகிறது. இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்துவிட வேண்டும். இட்லி, இடியாப்பம், கோதுமை ரவை உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி, பிரெட் ஆகியவற்றைச் சாப்பிடலாம். சப்போட்டா, மாதுளை, ஆப்பிள் ஆகிய பழங்களை சாப்பிடலாம். புளிப்புச் சுவை நிறைந்த பழங்களைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெயில் காலங்களில் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் இந்தப் பழங்கள், குளிர் காலங்களில் ஒத்துக்கொள்ளாது. காரணம், தட்பவெப்ப நிலைக்கு ஏற்றமாதிரி நம் உடல் செயல்பாடுகள் மாறுவதுதான். வெயில் காலங்களில் நமக்கு அதிகமாக வியர்க்கும்.

அப்போது வியர்வையுடன் சேர்ந்து அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் நம் உடலில் இருந்து வெளியேறும். அதை ஈடு செய்வதற்காக அமிலச் சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் மற்றும் மோர், பானகம் போன்ற புளிப்புச்சுவை நிறைந்த பானங்களைப் பருகுவோம். குளிர் காலத்தில் அதிகமாக வியர்க்காத நிலையில் இவற்றைக் குடிக்கும்போது, நம் உடலில் அதிக அளவில் அமிலச் சத்து சேர்ந்து, சளி, சைனஸ் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக பச்சை திராட்சையையும், பச்சை வாழைப்பழத்தையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பனிக்காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். குளிக்க வேண்டும். வெந்நீரில் கைப்பிடி அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் சளி பிடிக்காது, தொண்டை வலியும் வராது.

துளசி கிடைக்கவில்லை என்றால் கற்பூரவல்லி, தூதுவளை கீரை ஆகியவற்றில் கஷாயம் வைத்தும் குடிக்கலாம். எந்தக் கீரையும் கிடைக்கவில்லையென்றால் இரண்டு வெற்றிலையை மென்று சாப்பிடலாம். கற்பூரவல்லி கஷாயம் குடிக்கப் பிடிக்கவில்லையென்றால் அதில் பஜ்ஜி, மோர்க் குழம்பு செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கு முன்பு காதுகளின் பின்புறங்களில் லேசாகத் தைலம் தேய்த்தால் சளி பிடிக்காது. எந்த உணவாக இருந்தாலும் சுடச்சுட சாப்பிடத் தர வேண்டும். கடுகுடன் பால் அல்லது தண்ணீர் சேர்த்து அரைத்து, தினமும் பூசி வர, சருமம் மென்மையாகி, பளபளக்கும். ஒரு கரண்டி ஆலிவ் ஆயிலை ஒரு பக்கெட் நீரில் கலந்து குளிக்கலாம். சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி, மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு குளிக்கலாம்.

சிறிது பஞ்சை காதில் வைத்துக் கொண்டு சென்றாலும், குளிர் காற்றிலிருந்து தப்பிக்கலாம். குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்க்கவும். சூப் அருந்தலாம். குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிவித்து, வெளியே அழைத்துச் செல்வதும் அவசியம்.

எண்ணெய் மற்றும் மசாலா ஐட்டங்கள் அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. தினமும் காலையில், துளசி இலை நான்கை தண்ணீரில் ஊற வைத்து அருந்துவது நல்லது.

குளிக்கும் போது சோப்பு பயன்படுத்தாமல், கடலை மாவு அல்லது பயத்தம் பருப்பு மாவு தேய்த்து குளிக்கலாம். தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு, ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தை போட்டு பொங்கி வரும் போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு, அடுப்பை அணைத்து. சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டு கொண்டால் இதமாக இருக்கும்; இருமலும் அடங்கும்.

பாத வெடிப்பு நீங்க டிப்ஸ்

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஷ் கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும். வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும்.

விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

உதடுகளை பாதுகாப்பது எப்படி..?

சோற்றுக் கற்றாழை சாரையோ அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காமல் இருக்கும். பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை. உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் உதடுகள் வெடிக்கும். அதனால் குளிர் காலங்களில் தாகம் எடுக்கவில்லையென்றாலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையினாலும் உதட்டில் தோல்உரிந்து, வெடித்துப் புண்ணாகும். அதனால் சத்துள்ள பழங்கள்,காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்களின் கால்சியமும் வைட்டமின் 'டி' யும்



பெண்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது கால்சியம். வெறுமனே பாலையும், தயிரையும் குடிப்பதால் மட்டுமே கால்சியம் அளவு  அதிகரிப்பதில்லை. அதற்கு வைட்டமின் டி சத்து அவசியம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் குறைபாட்டால் பெண்கள் சந்திக்கக் கூடிய  பிரச்சனைகளைப் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

கால்சியம் பற்றாக்குறை வந்தா வரக்கூடிய பிரச்சனைகள் பத்தி மக்களுக்கு ஓரளவுக்குத் தெரியுது. ஆனா அந்த கால்சியத்துக்கு தேவையான  வைட்டமின் டி பத்தின விழிப்புணர்வு பலருக்கும் இல்லை..

முட்டையோடு வெள்ளை கரு, உலர் பழங்கள்னு உணவுப்பொருட்கள் மூலமா கிடைக்கிற வைட்டமின் டி ரொம்ப அரிது. அந்தச் சத்துக்கான ஒரே  ஆதாரம் சூரிய வெளிச்சம். ஆனா வெயில்ல தலைகாட்டினா சருமம் கருத்துடும், அழகு போயிடும்னு பலரும் வெயிலைத் தவிர்க்கறோம்.. அதிகாலை  சூரிய வெளிச்சத்துலதான் வைட்டமின் டி அதிகம் என்ற கருத்து உண்மையில்லை.. காலை 10 மணிலேர்ந்து பிற்பகல் 3 மணி வரைக்குமான  வெயில்ல தான் போதுமான வைட்டமின் டி சத்தை பெற முடியும்.

ஆனா அந்த நேரத்துல வெயில் அழகுக்கு எதிரிங்கிறதால சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் போட்டுக்கறோம். சன் ஸ்கிரீன் போடறது மூலமா  வைட்டமின் டி சத்து சருமத்துக்குள்ள ஊடுருவறது தவிர்க்கப்படுகிறது. தசைகள் வலுவோட இருக்க, இதயம் சரியா இயங்க ரத்தத்துல  ஹீமோகுளோபின் அளவு சரியான அளவுல இருக்க இப்படிப் பல விஷயங்களுக்கு வைட்டமின் டியும் அவசியம்..

கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தா அவங்களுக்குப் பிறக்கிற பெண் குழந்தைக்கு இடுப்பெலும்பு சின்னதா  இருக்கும். அந்த குழந்தை வளர்ந்து திருமணமாகி குழந்தை பெறும் நேரத்துல அதுக்கு சிசேரியன் தேவைப்படலாம். ஒரு மாசத்துக்கு ஒருத்தருக்கு  60ஆயிரம் யூனிட் வைட்டமின் டி தேவை.. ரத்தப் பரிசோதனை மூலமா இந்த பற்றாக்குறையைக் கண்டுபிடிக்கலாம்.

மருத்துவரோட ஆலோசனையோட வைட்டமின் டி மருந்துகளை 3 மாதங்களுக்கு எடுத்துக்கிட்டு மறுபடி ஒரு பரிசோதனை செய்து பார்த்து, போதுமான  அளவு இருக்கிற பட்சத்துல மருந்துகளை நிறுத்திடலாம். 35வயதுக்கு மேலான பெண்களும், கர்ப்பிணி பெண்களும் கட்டாயம் கால்சியம் மற்றும்  வைட்டமின் டி அளவுகள்ல கவனமா இருக்கணும். இது போதிய அளவு இருக்கிறது மூலமா முதுகு வலி, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை கூட  தவிர்க்க முடியும்.

23 முறை கேட்ட கேள்வி - (சிறுகதை)




23 முறை கேட்ட கேள்வி:-

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

உகந்த நேரத்தில் உணவின் அவசியம்...

 உகந்த நேரத்தில் உணவின் அவசியம்:-

உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பதை அறிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.


காலை

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்


மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.
காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு


இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.

மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.

பாரத ரத்னா நெல்சன் மண்டேலா




இனத்தின் விடுதலைக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, சற்றும் தளராமல் தன் இலட்சியத்தில் வெற்றி பெற்ற போராளி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா. சென்ற நூற்றாண்டின் கடைசி அறவழிப் போராளியான அவரை இந்த நூற்றாண்டில் உலகம் இழந்துவிட்டது.

தென்னாப்பிரிக்கா நாட்டின் கேப் மாகாணத்தில் உம்டாடா பகுதியில் உள்ள மெவிசோ கிராமத்தில் 1918-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் பிறந்தார் நெல்சன் மண்டேலா. அவரது அப்பா, காட்லா. அம்மா, நோஸ்கெனி. பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர், ரோபிசலா மண்டேலா. ரோபிசலா என்றால் கலகக்காரர் என்று அர்த்தம். பின்னாளில், அவர் உரிமைகளைப் பெறுவதற்கான கலகத்தில் ஈடுபட்டு உலகத்தின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்தார்.

மண்டேலாவின் முன்னோர்கள் அப்பகுதி மக்களின் நிர்வாகத் தலைவராக இருந்தவர்கள். அதனால், ராஜ குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தனர் மண்டேலா குடும்பத்தினர். ராஜ வம்சத்தினர் கையில் நிலப்பகுதி இருந்தாலும் அவர்களையும் ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்காவையும் வெள்ளைக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர்.

இந்தியாவிலிருந்து வழக்கறிஞராக தென்னாப்பிரிக் காவுக்குச் சென்ற காந்தியடிகள், அங்கு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தபோது, அவர் கருப்பு நிறத்தவர் என்பதால் வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் காந்தியடிகளை ரயிலிலிருந்து கீழே தள்ளியதையும் இதனையடுத்து நிறவெறிக்கெதிராக காந்தியடிகள் தன்னுடைய சத்யாகிரகப் போராட்டத்தை தென்னாப்பிரிக்காவில் தொடங்கியதையும் அறிவோம். அவருடைய போராட்டத்தினால் தென்னாப்பிரிக்காவில் தொழிலாளர்களாக இருந்த ஆயிரக்கணக்கான இந்திய குடும்பத்தினருக்கு உரிமைகள் கிடைத்தன.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகளைவிட அதிகமான கொடுமைகளை அந்நாட்டின் பூர்வகுடிகளான கறுப்பின மக்கள் அனுபவித்து வந்தனர்.  அவர்களை அடிமைகள்போல வெள்ளைக்காரர்கள் நடத்தி வந்தனர். மண்டேலாதான் அவரது குடும்பத்தில் முதன்முதலாக பள்ளிக்குச் சென்று படித்தவர். பள்ளியில் இருந்த ஆசிரியைதான் அவரது பெயருக்கு முன்பாக நெல்சன் என்பதைச் சேர்த்தார்.  அந்நாளில், தென்னாப்பிரிக்க மாணவர்களின் பள்ளிப் பதிவேட்டில் ஆங்கிலப் பெயர் இருக்கவேண்டும் என்கிற ஆதிக்க உத்தரவை வெள்ளைக்காரர்கள் விதித் திருந்தனர். அதனால்தான் மண்டேலாவின் பெயருக்கு முன்பாக நெல்சன் என்ற பெயர் சேர்க்கப்பட்டது. தங்கள் சொந்த அடையாளத்தைப் பெயரில்கூட காப்பாற்ற முடியாதவர்களாக தன் இன மக்கள் இருப்பதை பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்தார் மண்டேலா.  இரு சகோதரி களுடன் வளர்ந்த மண்டேலா, கிராமப்புறத்தில் கால்நடை களை மேய்ப்பார். சக வயது நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பார். தெம்பு அரண்மனையில் சட்ட-நிர்வாகப் பொறுப்புகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் அவருக் கிருந்ததால், பள்ளிப்படிப்புக்குப் பிறகு தன் ஆர்வத்திற்கேற்ற உயர்படிப்புகளை நாடினார்.


பி.ஏ. பட்டம் பெற்றதுடன், தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரமான ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பும் பயின்றார். கல்லூரி வாழ்க்கையின் போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் வால்டர் சிசுலுவுடன் மண்டேலாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதுபோல, கம்யூனிச இயக்கத்தவர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள், விளாடிமிர் இல்யீச் லெனினின் புரட்சிகர செயல்பாடுகள் அவரைக் கவர்ந்தன. எனினும் தென்னாப்பிரிக்காவில் வர்க்க பேதத்தைவிட நிற-இன பேதமே சிக்கல்களுக்கு காரணமாக இருப்பதாக உணர்ந்த மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவில் இணைந்து உரிமைப் போராட்டங்களில் பங்கேற்றார். கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. பொது இடங்களில் வெள்ளை நிறத்தவர் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் எதிர்த்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் போராடிவந்தது.

இயக்கப்போராட்டத்தில் இணைந்திருந்த எவிலின் என்ற பெண்ணை 1944-இல் மண்டேலா திருமணம் செய்து கொண்டார். போராட்டக்களங்களில் தொடர்ந்து பங்கேற்றார். 1947-இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவின் தலைவரானார். பின்னர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராகவும் இளம் வயதிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார் மண்டேலா. அவருடைய போராட்டங்கள் காந்தியடிகளைப் போல அறவழியில் அமைந்தன. பெருமளவில் மக்கள் திரண்டனர். இதனால் அவர் மீது தேசத்துரோக சதி குற்றச்சாட்டை சுமத்தி 1956-இல் கைது செய்தது தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு. நான்காண்டு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு  அந்த வழக்கை அரசு கைவிட்டது. இதனிடையே, அவருடைய திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டது. பின்னர், வின்னி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.

1960-ஆம் ஆண்டில் வெள்ளையர்களுக்கு சிறப்பு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு முடிவு செய்ததை எதிர்த்த கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தினர். ஷார்ப்வில்லி நகரத்தில் மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இனி, அறவழிப் போராட்டம் பலன் தராது என்ற முடிவுக்கு வந்த மண்டேலா ஆயுதப் போராட்டத்திற்குத் திரும்பினார்.  1961-இல் இனவெறிக்கு எதிரான முதலாவது ஆயுத தாக்குதல் மண்டேலா தலைமையில் நடந்தது.

தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் ராணுவ மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. மண்டேலாவைப் பிடிக்க வெள்ளை அரசு தீவிரமானது. அவர் தலைமறைவானார். அவரைத் தேடுவது என்ற பெயரில் கறுப்பின மக்களைத் துன்புறுத்தியது அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் மூலமாகவும் நெருக்கடிகள் உருவாயின. மண்டேலா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். 1962-ஆம் ஆண்டு அவரது இருப்பிடத்தை, மாறுவேடத்தில் சென்ற காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் உள்பட 10 முக்கிய தலைவர்கள் மீது புரட்சி, சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 1963-இல் தொடங்கி 1964 வரை நடந்த இந்த விசாரணையின் முடிவில் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

ராபன் தீவில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு, பாறைகளை உடைத்தல் போன்ற கடுமையான வேலை களுக்குட்படுத்தப்பட்டார். போராட்டத்தைக் கைவிட்டு, மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்வதாக அரசாங்கம் கூறியது. அதற்கு மண்டேலா மறுத்துவிட்டு சிறைவாசத்தைத் தொடர்ந்தார். 1964-லிருந்து 1982 வரை 18 ஆண்டுகள் அவர் அந்த சிறையில் அடைபட்டிருந்தார். 1982 முதல் போல்ஸ்மோர் சிறையிலும், 1988-லிருந்து விக்டர் வெர்ஸ்டர் சிறையிலும் அடைக்கப் பட்டார். அவர் சிறைப்பட்டிருந்தபோதும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன. காந்திய வழியே தனது மக்களுக்கான  சிறந்த போராட்ட வழி என்பதை மண்டேலா உணர்ந்தார். அதன்படியே போராட்டங்கள் தொடர்ந்தன.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என உலகநாடுகள் அழுத்தமாகக் குரல் கொடுத்தன. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசுக்கு நெருக்கடி உருவானது. தென்னாப்பிரிக்க அதிபராக அப்போது          டி கிளார்க் இருந்தார். அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கினார். இதனைத் தொடர்ந்து 27 ஆண்டுகால சிறைவாசத்துக்குப்பிறகு 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். தலைப்போராட்டத்தில் இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தலைவர் உலகில் வேறு யாருமில்லை.

1994-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக் காவில் மக்களாட்சி முறையிலான தேர்தல் நடைபெற்றது. அதில் மண்டேலா வெற்றிபெற்று அதிபரானார். முன்னாள் அதிபர் டி கிளார்க்கை துணை அதிபராக பதவியேற்கச் செய்ததுடன், அவரை அதிபர் மாளிகையில் தங்கவும் அனுமதித்தார் மண்டேலா. பகைவருக்கும் அருளும் நெஞ்சம் கொண்ட மண்டேலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசு அவருக்கும் டி கிளார்க்குக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. இந்திய பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது நம் நாட்டிற்கு வருகை தந்த நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருதும் அளிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க அதிபரான மண்டேலா அந்நாட்டை வளர்ச்சிப்பாதையை நோக்கி நகர்த்துவதற்கு கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அப் பணிகளை மேற்கொண்டார். 1999-இல் மீண்டும் தேர்தல் வந்தபோது, இரண்டாம் முறையாக அதிபராக மாட்டேன் என்று சொல்லி கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களுக்கு வழிவிட்டார். இதனிடையே வின்னியுடனான அவருடைய திருமண வாழ்க்கையும் முறிவு ஏற்பட்டு, கிரேசா என்பவரை மணம் செய்துகொண்டார் மண்டேலா.

தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைகளுக்கான அவருடைய செயல்பாடுகள் தொடர்ந்தன. எனினும் மிக நீண்டகால சிறைவாசம், அங்கு அனுபவித்த சித்ரவதைகள், அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகள் இவற்றின் காரணமாக மண்டேலாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் மரணமடைந்தார்.
மனிதகுலத்தின் விடுதலைக்கானப் போராட்டங்கள் ஓய்வதில்லை. விடுதலைக்காகப் பாடுபட்டவர்களும் வரலாற்றிலிருந்து அழிவதில்லை.

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்



அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.

'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.

அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன..?



உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

சமச்சீரற்ற முறையில் ஹார்மோன் சுரத்தல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வைட்டமின் பற்றாக்குறை, பொடுகு, டைபாய்டு, மலேரியா, தைராய்டு, நீரிழிவு, கூந்தலில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள். குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம்.

பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும். அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும், அடிக்கடி சீயக்காய் போட்டு கூந்தலை கடினமாக தேய்க்கக்கூடாது. மென்மையாகவே கையாள வேண்டும்.

• முடிஉதிர்வதைத் தவிர்க்க அழகு நிலையங்களில் மூலிகைகளால் செய்த ஹெர்பல் ஹேர் பேக், ஸ்பெஷல் ஸ்பா ட்ரீட்மெண்ட், டீப் கன்டிஷனர், சீரம் ட்ரீட்மெண்ட், வாசலின் ட்ரீட்மெண்ட் ஆகிய முறைகள் கையாளப்படுகிறது.

• வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

* இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

* தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...



குழந்தையின் காதுகளை பாதுகாப்பான முறையில் சுத்தப்படுத்துவதற்கான டிப்ஸ்...

காதுகளை சுத்தப்படுத்துவது என்பது ஒரு எளிய விஷயம் தான். ஆனால் அதுவே குழந்தைகளின் காதுகள் என்று வரும் போது சற்று சிரமமாக மாறி விடுகிறது. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்துவதால் அவர்களின் காதுகளில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் காதுகளின் மடிப்புகளில் தேங்க வாய்ப்புள்ள செத்த அணுக்களையும் நீக்கும். குழந்தைகளின் காதுகளில் உண்டாகும் வேக்ஸ் எந்த ஒரு தொற்றையும் ஏற்படுத்தாது. மேலும் அது காது கேட்கும் திறனையும் எந்த விதத்திலும் பாதிக்காது. அதனால் பொதுவாக காதுகளில் உருவாகும் வேக்ஸ் ஆபத்தில்லாத ஒரு சாதாரண பொருளாகவே திகழ்கிறது. இது கிருமிகள் மற்றும் அயல் பொருட்களை காதுக்குள் நுழைய விடாமலும் தடுக்கும். இருப்பினும் உங்கள் குழந்தைகளின் காதுகளில் அளவுக்கு அதிகமாக வேக்ஸ் உருவாகும் போது மருத்துவரை அணுகுவது நல்லது. அனுபவமுள்ள மருத்துவர் குழந்தையின் காதுகளில் இருக்கும் வேக்ஸ் மற்றும் அழுக்குகளை பாதுகாப்பாக எடுத்து விடுவார். குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த காட்டன் பட்ஸை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. காதுகளை சுத்தப்படுத்தும் முறைகளில் அதிக இடர்பாடு நிறைந்த தேர்வாக அது கருதப்படுகிறது. காதுகளை சுத்தப்படுத்தும் போது தவறு ஏற்பட்டால் அதன் விளைவு பெரிய ஆபத்துக்களில் போய் முடியும். இதனால் தொற்றுக்களும் உண்டாகும். காதுகளை சுத்தப்படுத்த சரியான முறையை கையாளாவிட்டால் செவிச்சவ்வு உடையும் அபாயமும் உண்டு. இதனால் காது கேட்கும் திறனை இழக்கவும் வாய்ப்பு உள்ளது.


                      அதனால் குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் போது கூடுதல் கவனமும் பொறுமையும் கண்டிப்பாக தேவை. குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ்களை பரிந்துரைத்துள்ளோம். அவைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் உங்கள் குழந்தையின் காதுகளை சுத்தப்படுத்துங்கள். குளிக்கும் போது சுத்தப்படுத்தவும் குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த அதனை குளிப்பாட்டும் வேளையே உகந்ததாக விளங்கும். ஈரத்துடன் இருக்கும் போது குழந்தைகளின் காதுகளை எளிதில் சுத்தப்படுத்தி விடலாம். நீரில் நனைத்த துணியை கொண்டு காதின் வெளிப்புறங்களை துடைத்து கொள்ளவும். அதன் பின் காதுகளின் உட்புற மடிப்புகளை துடைக்கவும். பின் எஞ்சியிருக்கும் வேக்ஸ்களை அகற்றவும். வெதுவெதுப்பான துணியை கொண்டு துடைக்கவும் உங்கள் குழந்தையை குளிப்பாட்டும் போது அதன் காதுகளை வெதுவெதுப்பான துணியை கொண்டு துடைத்திடுங்கள்.

                     உங்கள் குழந்தையின் காதுகள் சுத்தமாக இருக்க இதனை சீரான முறையில் செய்தாலே போதுமானது. காதுகளில் சேர்ந்துள்ள செத்த அணுக்கள் மற்றும் வேக்ஸ் ஆகியவற்றை இது நீக்கிடும். காட்டன் பட்ஸ் குழந்தைகளின் காதுகளுக்குள் காட்டன் பட்ஸை நுழைக்கவே கூடாது. பொதுவாகவே குழந்தைகளின் காதுகளுக்குள் ஆழமாக எந்த பொருளையுமே நுழைக்க கூடாது. இது முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸாகும். இது செவிச்சவ்வை பாதித்து பல சிக்கல்களை ஏற்படுத்தி விடும்.
 
                     காதுகளுக்கான சொட்டு மருந்து குழந்தைகளின் காதுகளில் அளவுக்கு அதிகமான வேக்ஸ் உருவாகியிருந்தால் அதனை நீக்க மேற்கூறிய டிப்ஸ் எடுபடாமல் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் காதுகளுக்கான சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டும். இவ்வகையான சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். சுயமான வழிமுறைகளை தவிர்க்கவும் மருத்துவ ரீதியான வழிமுறையை பின்பற்றாமல் சில பேர் வீட்டு சிகிச்சை முறையை பின்பற்ற கூடும். அப்படி எதையும் முயற்சி செய்யாதீர்கள். அது குழந்தையின் காதுகளை பாதித்து விடலாம். உங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

வறண்டு காணப்படும் நேரத்தில் சுத்தப்படுத்தாதீர்கள்

ஈரப்பதம் இல்லாமல்வறண்டு காணப்படும் நேரத்தில் குழந்தையின் காதுகளை சுத்தப்படுத்தாதீர்கள். அது சருமத்தில் எரிச்சலையும் சிராய்ப்புகளையும் ஏற்படுத்தும். குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்த எப்போதுமே நீரில் நனைத்த துணியையே பயன்படுத்துங்கள். முடிந்த வரை குழந்தையை குளிப்பாட்டி விடும் நேரத்திலேயே காதுகளையும் துடைத்து விடுங்கள்.

கவனமாக இருங்கள்

பொதுவாக காதுகளை சுத்தப்படுத்தும் போது குழந்தைகள் உங்களோடு முழுமையாக ஒத்துழைப்பதில்லை. துடைத்து கொண்டிருக்கும் போது திடீரென அவர்கள் தலையை ஆட்டி விடும் அபாயம் இருப்பதால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனமாக இருப்பதால் விபத்துகளை தவிர்க்கலாம்.

Wednesday, 1 January 2014

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?




ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

 உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

 ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்


ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

அதிக ஆற்றலை தரும் தானியம்


ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்


ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

 இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

குறைந்த கலோரி உள்ள தானியம்

ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

 ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

தயாரிப்பதற்கு சுலபம்


ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.