Search This Blog

Wednesday, 27 November 2013

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க...

 

காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம்.

ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை. மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு: இந்த ஜூஸ்களை குடிக்கும் போது, அதில் குளிர்ச்சியான தண்ணீரோ, பாலோ அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்க்கக் கூடாது.

எலுமிச்சை ஜூஸ்


 எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிவதோடு, புண்ணும் குணமாகும்.

இஞ்சி ஜூஸ்


 இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதால், இது எந்த வகையான கிருமியானாலும் எளிதில் அழித்துவிடும். எனவே தொண்டை கரகரவென இருக்கும் போதே, சிறிது இஞ்சி ஜூஸ் குடித்துவிடுங்கள்.

கேரட் ஜூஸ்

 கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தொண்டையில் எவ்வித தொற்றுகள் இருந்தாலும் குணப்படுத்திவிடும். அதலும் இதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், தொண்டைப் புண்ணின் தொல்லையில் இருந்து குணமாகலாம்.

பூண்டு ஜூஸ்

 இஞ்சியைப் போன்றே பூண்டிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே தொண்டைப் புண் இருக்கும் போது 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பூண்டு ஜூஸ் குடித்தால், உடனே குணமாகிவிடும்.

குருதிநெல்லி ஜூஸ் (Cranberry Juice)

தொண்டைப் புண்ணை சரிசெய்யும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் குருதிநெல்லி. ஆகவே தொண்டைப் புண் இருக்கும் போது குருதிநெல்லியை ஜூஸ் போட்டு குடியுங்கள்.

ஆரஞ்சு ஜூஸ்
 ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண் மற்றும் வலி குணமாகும்.

கற்றாழை ஜூஸ்


 கற்றாழை ஒரு சிறப்பான மூலிகைப் பொருள். இந்த கற்றாழையை சாறு எடுத்து, அதில் சிறிது கிராம்பு பொடி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.

தக்காளி ஜூஸ்

 தினமும் இரண்டு முறை தக்காளி ஜூஸில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புதினா ஜூஸ்
 இஞ்சி, பூண்டு போன்றே புதினாவிலும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளது. அதற்கு இதனை சாறு எடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து குடிக்க வேண்டும்.

அன்னாசிப் பழ ஜூஸ்

 அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் இருப்பதால், இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

கிவி ஜூஸ்


 கிவி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் கூட தொண்டைப் புண்ணுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது வறட்சி இருமலில் இருந்து பாதுகாக்கும்.

வாழைப்பழ ஜூஸ்


 வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணை சரிசெய்யலாம். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விலகி இருக்கலாம்.

தர்பூசணி ஜூஸ்


 தர்பூசணியை வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆப்ரிக்காட் ஜூஸ்


 தொண்டைப் புண்ணினால் அவஸ்தைப்படும் போது, ஆப்ரிக்காட் ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.

மிளகு கசாயம்

 மிளகை வாணலியில் போட்டு நன்கு வறுத்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அந்த நீரை சூடாக குடித்தால், தொண்டையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, தொண்டைப் புண் உடனே குணமாகும்.

No comments:

Post a Comment