Search This Blog

Thursday, 28 November 2013

உலகில் உள்ள மிகவும் புகழ் பெற்ற நடன வகைகள்!!!

நம்மில் பல பேருக்கு உணர்சிகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த பெரிதும் உறுதுணையாக விளங்குகிறது நடனம். மேலும் நம்முடைய சந்தோஷம், காதல், காயம் மற்றும் வலி போன்ற உணர்வுகளையும் அது வெளிப்படுத்த உதவும். ஒரு வகையில் புத்துணர்ச்சி பெறவும் பொழுதை போக்கவும் நடனம் பயன்படுகிறது. இசைக்கு பிறகு நம்மை சாந்தப்படுத்தி அமைதி படுத்த இன்னொன்றால் முடியும் என்றால் அது தான் நடனம்.

இந்த உலகத்தில் பல வகையான நடனங்கள் உள்ளது. ஒவ்வொரு சாதியும் பண்பாடும் தனக்கென ஒரு வகையான நடனத்தை உருவாக்கியுள்ளது. நடனத்தால் பல வகையான நாட்டுப்புற பண்பாடுகள் பிரபலமடைந்துள்ளது. அதன் விளைவாக அதனை உலகத்தில் பலரும் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். இவ்வகையான பல நடனங்கள் புகழை பெற்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி புகழை பெற்று உலகம் முழுவதும் அதனை பின்பற்றுவதால் இனி எந்த ஒரு நடனமும் ஒரு தனிப்பட்ட இடத்தை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதே போல் ஒவ்வொரு நடனத்தின் ஸ்டைல்களையும் எங்கிருந்து வேண்டுமானாலும் கற்று கொள்ளும் வசதியும் இப்போது வந்து விட்டது.

உலகில் உள்ள மிகவும் புகழ் பெற்ற நடன வகைகள்!!!

ஹிப்-ஹாப், கிளாசிகள், சல்சா, பெல்லி, பாலே என எண்ணிலடங்கா பல வகை நடனகள் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி வருகிறது. நம் நாட்டையே எடுத்துக் கொள்வோம்; பரதநாட்டியம், கத்தக், ஒடிஸி, குச்சிப்பிடி, கத்தக்களி என பல வகைகள் உள்ளது. இது போக புகழ் பெற்ற குத்து டான்ஸை யாரும் மறக்க முடியாது. இப்படி ஒவ்வொரு நடனமும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக விளங்குகிறது.
   
ஹிப்-ஹாப் நடனம்

புகழ் பெற்ற நடன வகையான இதனை ஸ்ட்ரீட் டான்ஸ் (தெரு நடனம்) என்றும் அழைக்கின்றனர். 1970-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் ஹிப் ஹாப் இசை கலாச்சாரத்தால் உருவாக்கப்பட்டதே இவ்வகை நடனம். இவ்வகை நடனம் இன்று உலகத்தில் உள்ள அனைவராலும் பழகி ஆடப்படுகிறது. லாகிங் மற்றும் பூப்பிங் நடன ஸ்டைல்கள் இந்த நடனத்திலேயே அடங்கும். ஹிப்-ஹாப் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி ஆடும் நடனமாக புகழ் பெற்று விளங்குகிறது.

சல்சா

ஈர்ப்புள்ள ஆற்றல் நிறைந்த இவ்வகை நடனம் முதன் முதலில் க்யூபாவில் தான் தொடங்கிற்று. இன்று ஒவ்வொரு இளம் ஜோடிகளும் இவ்வகை நடனத்தை விரும்பி ஆடுகின்றனர். காதல், மனக்கிளர்ச்சி மற்றும் உணர்ச்சிகளை மிகவும் நேர்த்தியான முறையில் வெளிப்படுத்த உதவும் இந்நடனம். ஜோடிகள் ஆடும் இந்நடனம் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறது. லத்தீன் அமெரிக்க இசையோடு மிகவும் பொருத்தமாக அமையும் இந்த நடனம். இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் அனைத்து இசை வகைகளுக்கும் இந்த நடனம் ஆடப்படுகிறது.

கத்தக்

இந்திய நடனக் கலையான கத்தக், மேலோங்கி ஈடுகொடுக்கும் ஒரு நடன வகையாகும். தென் இந்திய மாநிலங்களில் உருவாக்கப்பட்ட இவ்வகை நடனம் இந்தியாவில் உள்ள 8 கிளாசிகள் நடன வகைகளில் ஒன்றாகும். இந்நடனம் அதன் தோரணைகள் மற்றும் முத்திரைகளுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. பண்டைய காலங்களில் கதைகள் மற்றும் புராணங்களை விளக்க இவ்வகை நடனம் பயன்படுத்தப்பட்டது. மிகவும் கடினமான இந்த நடனத்தில் தேர்ச்சி பெற தீவிரமான பயிற்சி தேவைப்படும். இந்த நடனத்திற்கு பல பரீட்சைகளும் உள்ளது. இந்த நடனத்தில் தேர்ச்சி பெற பல வகையில் உள்ள இந்த தேர்வுகளில் தேற வேண்டும். பொதுவாக இந்திய கிளாசிக் இசையோடு கத்தக் நடனம் ஆடப்படும்.

பெல்லி நடனம்

கவர்ச்சிகரமான பெண்கள் ஆடும் இந்த நடனம் மேற்காசிய நாடுகளில் உருவாக்கப்பட்டது. ப்கழ் பெற்ற நடன வகைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இவ்வகை நடனத்தில் உடம்பில் உள்ள அத்தனை பாகங்கள் ஈடுபட்டாலும் கூட இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கப்படும். முதலில் இவகை நடனம் எல்லோராலும் அங்கீகாரப் படுத்தப்படவில்லை. இருப்பினும் காலப்போக்கில் இது அனைவராலும் ஏற்கப்பட்டு விட்டது. சரியான நேரத்தில் சரியான அசைவுகளை கொடுக்க வேண்டியுள்ளதால் பெல்லி நடனம் என்பது லேசுபட்டதில்லை.

லைன் நடனம்

இவ்வகை நடனம் கண்டுப்பிடிக்கப்பட்டு நீண்ட காலமாகவில்லை. இவ்வகை நடனத்தில் ஒரு குறிப்பிட்ட நடன அசைவுகளை நடன கலைஞர்கள் ஒரு கோட்டில் நின்று ஆடுவார்கள். இவ்வகை நடனம் அவர்களால் தினமும் கூட ஆடப்படுகிறது. இவ்வகை நடனத்தை ஏரோபிக்ஸ் மற்றும் ஜூம்பா போன்ற நடனங்களை போல உடற்பயிற்சி மற்றும் உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்தலாம்.

இவைகள் போக, இன்னமும் கூட புகழ் பெற்ற நடன வகைகள் இருக்கத்தான் செய்கிறது. பீ பாயிங், டாப் நடனம், பாலே மற்றும் புகழ் பெற்ற கங்க்னம் ஸ்டைல் நடனம் போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். இவ்வகை நடனங்கள் அனைத்துமே உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவும். அதனால் உங்களை நற்பதத்துடனும் ஆரோக்கியத்துடனும் வைத்திடும். இதில் ஏதாவது சிலவற்றை அல்லது அனைத்தையுமே ஆடினால், உங்கள் மனதும் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

நடனம் என்பது தூய்மையான ஒரு கலையாகும். அதனை இதயத்திலிருந்து ரசித்து அனுபவிக்க வேண்டும். நீங்கள் ஆடினால் அமைதியில் கிடைக்கும் ஆனந்தத்தை விட உங்கள் இதயம் கண்டிப்பாக ஆனந்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment