Search This Blog

Sunday, 17 November 2013

சும்மா’ என்ற சொல் கோபமூட்டும்!

பேசும்போது சிலர் வழக்கமாக ஒருவித சொற்களை உச்சரிப்பார்கள், அது மற்றவர்களுக்கு பிடித்திருக்கலாம்; அல்லது எரிச்சல் தரலாம். அப்படி, நமது உரையாடலில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்கள் எவை?, அதில் அதிக எரிச்சலை மூட்டும் சொற்கள் எவை? என்பது பற்றி சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு அமெரிக்காவில் நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில், “வேறு என்ன?”, “அப்புறம்” என்ற சொற்கள் தான் அதிகமாக உறவு முறிவை, மனக்கசப்பை ஏற்படுத்தும் சொல் என்று தெரிய வந்துள்ளது. நியூயார்க் நகரிலுள்ள மாரிஸ்ட் கல்லூரி மாணவர்கள் இந்த கணக்கெடுப்பை நடத்தினார்கள். அந்த ஆய்வில் 10-ல் நான்கு பேர், “வேறென்ன”, “ஏதாவது” என்ற சொற்கள்தான் தங்களுக்கு தொந்தரவு செய்யும் வார்த்தையென்று குறிப்பிட்டுள்ளனர். ஐந்தில் ஒருவர், “இந்த மாதிரி”, “உனக்குத் தெரியுமா” போன்ற வார்த்தைகள் தங்களுக்கு எரிச்சல் தரும் என்று கூறி இருந்தனர்.

அதேபோல, “சும்மா”, “நிஜமாகவே” போன்ற வார்த்தைகள் பொறுத்துக் கொள்ள முடியாத கோபத்தை ஊட்டுவதாகவும் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டது. நீங்கள், மற்றவர்களுடன் சுமூகமான உறவை நீடிக்க விரும்பினால், “வேறு ஏதாவது பேசு”, “வேற ஒண்ணுமில்லையா?”, “அப்புறம்” என்ற வார்த்தைகளை குறைவாக உச்சரியுங்கள். “நீ இந்த மாதிரி தவறுகளை செய்கிறாய்,” “அவன் இந்த மாதிரிதான்”, “அது உனக்குத் தெரியுமா?” “என்னைப் பற்றித் தெரியுமா”, “அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?”, “சும்மாதான் சொன்னேன்,” “விளையாட்டுக்குச் சொல்லவில்லை, சீரியசாகவே சொல்கிறேன்” போன்ற வார்த்தைகள் அதிகம் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment