தேவையான பொருட்கள்:
========================
கடலை மாவு - ஒரு கப்
சர்க்கரை - இரண்டு கப்
நெய் - ஒண்ணேகால் கப்
முந்திரி பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
அரை கப் - நீர்
செய்முறை:
===========
* கடலை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து வறுத்து வைக்கவும்.
* சர்க்கரையை நீர் சேர்த்து கலந்து பாகு தயாரிக்கவும்.
* பாகின் பதம் பார்க்க சிறிது பாகை எடுத்து அதை குட்டி பந்து போல் உருட்ட முடிந்தால் அதுவே சரியான பதம்.
* மெது மெதுவாக மாவை சேர்த்து கட்டி உருவாகாமல் கலக்கவும்.
* ஒன்று சேர்ந்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் எடுத்து வைத்து மீதம் உள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கவும்.
* slow flame மில் வைத்து கிளறவும்.
* தனியாக எடுத்து வைத்த நெய்யை ஒரு பாத்திரத்தில் முழுவதும் படுமாறு தடவவும்.
* கிளறிய பாகை நெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி சமமாக பரப்பி விடவும்.
* நன்றாக ஆறியதும் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போடவும்.
* சுவையான நெய் மைசூர் பாக் தயார்.
குறிப்பு:
=======
சர்க்கரை பாகின் பதம் சரியாக வரவில்லை என்றாலோ,மாவு சரியாக இல்லைஎன்றாலோ சுவையும் பதமும் சரியாக வராது.முதன் முறையாக செய்கிறீர்கள் என்றால் மிகவும் சிறிய அளவில் செய்து பார்க்கவும்.
No comments:
Post a Comment