தந்தை பெரியார் பிறந்த மண். 1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும் காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையிலும், தென்னிந்திய தீபகற்பத்தில் மையத்திலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது இந்தியாவின் கைத்தறி நகரம் எனவும் பாரதத்தின் ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஈரோடு நகராட்சி 01.01.2008 முதல் 'ஈரோடு மாநகராட்சி' யாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே சந்தைப்படுத்தப்படுகின்றன. இது மஞ்சள் மாநகரமாகவும் (Turmeric City) மற்றும் ஜவுளி மாநகரமாகவும் (Textile City) திகழ்கிறது. ஈரோடு கொங்கு நாட்டில் ஒரு முக்கிய நகரமாக உள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய், காங்கேயம் காளை இரண்டும் ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு.
இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள்
தந்தை பெரியார்
பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்[1]. இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.
சீனிவாச ராமானுஜம்
சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
தீரன் சின்னமலை
மாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.
ஈரோடு மாவட்டம் 5 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
பவானி
ஈரோடு
கோபிசெட்டிபாளையம்
பெருந்துறை
சத்தியமங்கலம்
இம்மாவட்டத்துடன் இருந்த தாராபுரம், காங்கேயம் வட்டங்கள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment