முதன் முறையாக அணு மூலக்கூறு உட்பகுதியை படமெடுத்து நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள்ர் புதிய சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.!.
இந்த உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணுக்களால் ஆனவை.இந்த அணுக்களை ஒருபோதும் பிரிக்க முடியாது என்று முதலில் கருதப்பட்டது ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்படி பிரிக்கப்பட்ட அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் எர்னெஸ்ட் ருதர்போர்ட் என்பவரே இது போன்று அணுவை வெற்றிகரமாக பிரித்ததால் அணுப் பெளதிகவியலின் தந்தை என்று கருதப்படுகின்றார்.அத்துடன் இவரை இரண்டாம் நியூட்டன் எனறும் அழைக்கிறார்கள்.
இந்நிலையில் பிரிக்கப்பட்ட அணு மூலக்கூறின் உள் பகுதியின் வடிவமைப்பை யாராலும், எந்த சூழ்நிலையிலும் இதுவரை போட்டோ எடுக்க முடியவில்லை. ஏனெனில் அணு சோதனையின்போது அவற்றின் துகள்கள் உடனடியாக அழிந்துவிடும்.
ஆனால், சமீபத்தில் நடந்த சோதனையின்போது நெதர்லாந்து விஞ்ஞானிகள் லேசர் கருவிகள் மற்றும் மைக்ராஸ்கோப் உதவியுடன் ஹைட்ரஜன் துகள்களை பார்த்தனர். இதற்கு முன்பு இதுபோன்ற துகள்களை பார்த்ததில்லை.
எனவே, அவற்றின் உள் அமைப்பை உடனடியாக போட்டோ எடுத்தனர். இதற்காக அவர்கள் 20 ஆயிரம் மடங்கு பெரிதாக காட்டும் விசேஷ லென்சையும், மிகப் பெரிதாக காட்டும் மைக்ராஸ்கோப்பையும் பயன்படுத்தினார்கள்.
தற்போது அணு மூலக்கூறின் உள் அமைப்பை போட்டோ எடுத்ததன் மூலம் எலெக்ட்ரானிக்சின் புதிய அமைப்பை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Amazing! First ever photograph inside a hydrogen atom:-
Scientists have captured the first ever photo of an electron’s whizzing orbit within a hydrogen atom, thanks to a unique new microscopy technique.
No comments:
Post a Comment