Search This Blog

Monday, 5 January 2015

போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ?



நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம்.


இப்போதெல்லாம், இது போன்ற ஸ்கேம் மெயில்களை வடிகட்டி, ஸ்கேம் மெயில் போல்டருக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தை கூகுள் போன்ற மின் அஞ்சல் தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், சில அஞ்சல்கள், இவற்றின் பிடியில் சிக்காமல், நம்மை வீழ்த்தப் பார்க்கின்றன. அப்படிப்பட்ட ஓர் அஞ்சலைப் பெற்றால், சந்தேகம் ஏற்பட்டால், என்ன செய்வது?



இந்த வகையில் நமக்கு உதவ ஓர் இணைய தளம் இயங்குகிறது. வந்திருக்கும் அஞ்சலில் உள்ள சில சொற்களை, இந்த தளத்திற்கு அனுப்பினால், அது சோதனை செய்யப்பட்டு, நமக்கு அது ஸ்கேம் வகை அஞ்சலா அல்லது வழக்கமான அஞ்சலா என்று தெரிவிக்கிறது. இந்த தளத்தின் இணைய முகவரி  jasonmorrison.net


இந்த தளமானது கூகுளின் தேடல் இஞ்சின் ஒன்றைப் பயன்படுத்துகிறது. இந்த தேடல் இஞ்சின், ஏற்கனவே ஸ்கேம் மற்றும் திருட்டு முயற்சிகளுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் தளங்கள் மற்றும் சில குழு தகவல் தளங்களின் உதவியுடன், வந்திருப்பது ஸ்கேம் மெயிலா எனக் கண்டறிகிறது. இந்த தளத்தை அடைந்தவுடன், தேடல் கட்டத்தின் கீழாக உள்ள LEARN MORE என்ற லிங்க்கில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பாருங்கள். இந்த தளம் ஏற்பட்டதன் நோக்கம் என்ன, என்ன வகையில் உங்களுக்கு உதவுகிறது என்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.



எனக்கு வந்த மெயில் ஒன்றில், ரொஸட்டா என்ற பெயரில் விலை உயர்ந்த மரகதக் கல் ஒன்று குறைந்த விலைக்குக் கிடைப்பதாக தகவல் இருந்தது. அப்படியே அதன் முக்கிய சொற்களைக் காப்பி செய்து, இந்த தளத்தில் போட்டு கிளிக் செய்த போது, சில விநாடிகளில் தகவகள் கிடைத்தன. இது போன்ற ஸ்கேம் மெயில்கள் எங்கெல்லாம் அனுப்பப் பட்டுள்ளன என்ற தகவலும் கிடைத்தது. இனி, எந்த சந்தேகம் தரும் மெயில் வந்தாலும், அதனை இந்த தளத்தின் உதவியுடன் சோதனை செய்து, அதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளுங்கள்.

வாங்க திட்டமிடலாம்,அழைக்கும் இணையதளம்.!



திட்டமிட்டு செயல்பட உதவும் இணையதளம் இதைவிட எளிமையாக இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது டெய்லிடுடூ.காம்.

அழகான வெள்ளைக்காகிதம் போன்ற முகப்பு பக்கம்,அதன் நடுவே உங்களுக்கான குறிப்பேடு.இவ்வள்வு தான் இந்த தளம். இந்த குறிப்பேட்டில் தான் இன்று செய்ய வேண்டும் என நினைக்கும் பணிகளை எல்லாம் நீங்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மற்றபடி உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ள தனியே கணக்கு துவங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆக பாஸ்வேர்டை நினைவில் கொள்ள வேண்டி தொல்லையும் இல்லை.

திட்டமிட்டு செயல்படுவது என தீர்மானித்தவுடன்,இந்த தளத்தில் உங்களுக்கான குறிப்பேட்டில் ஒவ்வொரு தினத்திற்கான பணிகளை குறித்து வைக்ககத்துவங்கி விடலாம்.செய்ய நினைப்பதை டைப் செய்து சேமிக்க என கிளிக் செய்தால் போதும், அந்த கட்டளை நம் நினைவூட்டலுக்காக காத்திருக்கும்.இப்படி ஒவ்வொரு செய‌லையும் சேமித்துக்கொள்ளலாம்.

டைப் செய்யத்துவங்கியதுமே நமக்கான தனி இணைய முகவரி உருவாக்கப்பட்டு விடுகிறது.அடுத்த முறையில் இருந்து அந்த பிரத்யேக ,முகவரியில் உள்ள குறிப்பேட்டை பயன்படுத்தலாம். தின‌மும் செய்ய விரும்புவதை இப்படி டைப் செய்து குறித்து கொள்ளலாம். அதன் பிறகு இந்த குறிப்பேட்டை பார்த்து என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளலாம். செய்து முடித்தால் அதையும் குறித்து கொள்ளலாம்.

புதிய பணிகளை குறித்து வைக்க,திருத்த என்னும் இடத்தில் கிளிக் செய்தால் பழைய குறிப்பேடு வந்து நிற்கிறது.அதில் நாட்காட்டி போல வரிசையாக தேதி அடிப்படையில் குறித்து வைத்த பணிகளை காணலாம்.

திட்டமிடலை எப்படி நிறைவேற்றியிருக்கிறோம் என பத்து நாள் கழித்தோ ,மாத கடைசியிலோ சரி பார்த்துக்கொள்ளலாம்.

எளிமையான தளம் என்றாலும் நேர்த்தியானது. ஆங்கிலத்தில் தான் டைப் செய்ய வேண்டும். ஆனால் தமிழில் பயன்படுத்த விரும்பினால் வேறு ஒரு செயலியில் டைப் செய்து இங்கே பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

பயன்படுத்தி பாருங்கள். திட்டமிடல் உங்களுக்கு வெற்றி தரட்டும்.

திட்டமிட… http://www.dailytodo.org/

Sunday, 4 January 2015

புதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி?



 மின்னஞ்சல் பயன்படுத்தும் போது நமக்கு அடிக்கடி வரும் பிரச்சினை நமக்கு வரும் ஈமெயில்களை உடனடியாக நம்மால் அறிய முடியாதது. எப்போதும் ஆன்லைனில் இருக்க முடியாத காரணத்தால் இந்த பிரச்சினை நமக்கு வரும். இதே புதிய ஈமெயில் நமக்கு வந்துள்ளது என்பது SMS மூலம் அறிய முடிந்தால்? எப்படி என்று பார்ப்போம்.

1. முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள்.

2. ஏற்கனவே அக்கௌன்ட் இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய அக்கௌன்ட் தொடங்கவும்.

3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும்.

4. இப்போது  Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும்.

5. இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும்.

6. இப்போது உங்கள் Mobile க்கு ஒரு SMS வரும். அதில் Confirmation Code இருக்கும். இல்லை என்றால் Way2sms-இல் Mail Alert பகுதியில் Inbox 123456@way2sms.com என்பதை கிளிக் செய்தால் வரும். எதுவும் வரவில்லை என்றால் ஜிமெயிலில் Resend email என்பதை கிளிக் செய்யவும்.

7. இப்போது நீங்கள் பெற்ற Code-ஐ ஜிமெயிலில் Forwarding and POP/IMAP பகுதியில்  தர வேண்டும். தந்த உடன் கீழே உள்ளது போல மாற்றிக் கொள்ளுங்கள்.

8. அவ்வளவு தான் இனி புதிய ஈமெயில்கள் உங்களுக்கு மொபைலில் Alert ஆக வந்து விடும். யாரிடம் இருந்து ஈமெயில் மற்றும் Subject போன்றவை அதில் வரும். நீங்கள் மீண்டும் இணைய இணைப்பை பயன்படுத்தி உடனடியாக ஈமெயில்க்கு பதில் அளித்து விடலாம்.

பால் கொழுக்கட்டை - சமையல்!


 Paccarici flour with salt, hot pudding and mashed scroll to the terms.

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1/2 கப்,
பொடித்த வெல்லம் - 1/2 கப்,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிது.


எப்படிச் செய்வது?


பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, வெந்நீர் விட்டு கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக  உருட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவி, முதல் இரண்டு பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தையும் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இரண்டாம்  தேங்காய் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு அதிலேயே உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு  வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும் முதல் பால் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி, பின் பறிமாறவும்.

எப்படி சாப்பிட வேண்டும்?


‘ஸ்பா’ என்று சொன்னதுமே இளசுகளின் புத்துணர்ச்சி மையம் என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள். சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும், அழகு நிலையங்களிலும் ஸ்பா கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. சரி, இந்த ‘ஸ்பா’வை முதன்முதலில் இந்தியாவில்அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா?

அசோக் கண்ணா. இவர்தான் ‘ஸ்பா’மகன்! அமெரிக்காவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர். பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவர். 1999ம் ஆண்டு சுபயோக சுபதினத்தில் இமாசலப் பிரதேசத்தில் டெஸ்டினேஷன் ஸ்பாவான ‘ஆனந்தா’வை தொடங்கினார். உலகம் சுற்றும் வாலிபனாக பறந்துகொண்டிருக்கும் இவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

‘‘அவசர வாழ்க்கைக்குப் பழகிட்டோம். இந்த வேகத்துலேந்து சில நாட்களாவது தப்பிக்க முடியுமான்னு யோசிக்கிறோம் இல்லையா? அவங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஸ்பா’. இதுவெறும் அழகு நிலையம், நீராவிக்குளியல், மசாஜ் மட்டும் கிடையாது. ஆயுர்வேத, அரோமாதெரபி சிகிச்சையோட நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்னு பஞ்ச பூதங்களின் சக்திகளை ஒருங்கிணைச்சு மனசையும், உடலையும் சுத்தப்படுத்தறதுதான் ‘ஸ்பா’.

 >> ஒவ்வொருவரும் உணவை எப்படி பிரிச்சு சாப்பிடனும்னு ஒரு வரைமுறை இருக்கு. அதன்படி செஞ்சா, உடலும் மனசும் ஆரோக்கியமா இருக்கும்.

 >> மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும்.

 >> ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

 >> ஒரு முறை சாப்பிட்டதும், அந்த உணவு நல்லா செரிமானம் ஆன பிறகுதான் அடுத்த வேலைக்கான உணவை எடுத்துக்கனும்.

 >> புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம்.

 >> உப்பு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏன்னா, கொழுப்புள்ள உணவை சாப்பிடனும்ங்கற ஆர்வத்தைத் தூண்டுவது உப்புதான்.

 >> கார்போஹைட்ரேட் அதிகமிருக்கிற அரிசி உணவை குறைச்சலா சாப்பிடவும்.

 >> பச்சைக் காய்கறிகளை தினமும் மூனு வேலையும் சாப்பிடறது நல்லது. நான்கைந்து பழங்களை ஒண்ணா சேர்த்து சாப்பிடக் கூடாது.

 >> உணவுக்கு அரை மணிநேரம் முன்னாடி பழம் சாப்பிடலாம். அல்லது உணவு சாப்பிட்ட 2 மணி நேரங்கள் கழிச்சு பழங்களை சாப்பிடலாம். ‘ஸ்பா’ எடுத்துக் கொள்ள பர்ஸ் தடுத்தாலும் இந்த வழிமுறைகளை உணவில் பின்பற்றலாமே?

பூண்டு சூப் - சமையல்!



தேவையானவை:

முழுப்பூண்டு – 2 ...
 
வெங்காயம் – ஒன்று
 
தண்ணீர் – அரை லிட்டர்
 
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
 
பால் – ஒரு கப்
 
கெட்டித் தயிர் – சிறிதளவு
 
ஆலிவ் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன்
 
மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

*பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும்.

* இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும்.

* நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* சோள மாவு சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

* பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

* இந்த சூப் வயிறு உபாதை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

Saturday, 3 January 2015

இணைய எலும்புக்கூடுகளை உருவாக்க!

text-mirror 

ஒரு இணையதளத்தை எந்த விதமான வடிவமைப்பு அலங்காரங்களும் இல்லாமல் அதன் வரி வடிவிலான தகவல்களை மட்டும் பார்க்க விரும்பினால்,டெக்ஸ்ட்மிரர் இணையதளம் அவ்வாறு அந்த தளத்தை மாற்றி தருகிறது.


எந்த இணையதளத்தை மாற்ற வேன்டுமோ அதை இந்த தளத்தில் சமர்பித்தால், அதில் உள்ள இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் நீக்கிவிட்டு வெறுமையாக தருகிறது.அப்போது வெறும் வரி வடிவிலான தகவல்கள் மட்டுமே இருக்கும்.மற்றபடி, புகைப்படங்களோ,விளம்பரங்களோ வேறு எந்த அம்சமும் இருக்காது.
எதோ கம்ப்யூட்டர் புரோகிராமிங் எழுதப்பட்டது போல அந்த பக்கம் காட்சி அளிக்கும்.சரி, இப்படி இணையதளங்களை அவற்றின் வடிவமைப்பு மற்றும் எச்டிஎமெல் சார்ந்த அம்சங்களை நீக்கி விட்டு வெறும் எலும்புக்கூடு போல பார்க்க வேண்டியதன் அவசியம் என்ன?


பல பிரவுசர்களில் வரி வடிவில் மட்டும் சேமிப்பதற்கான வசதி இருக்கிற‌தே என்று கேட்கலாம். உண்மைதான் பிரவுசர்கள் மூலமே ஒரு தளத்தின் வரி வடிவத்தை மட்டும் சேமிக்கலாம் தான்,ஆனால் டெக்ஸ்ட்மிரர் பயன்படுத்தும் போது தளத்தின் மூல வடிவமைப்பு அப்படியே பாதிக்காமல் இருக்கிறது.அதாவது இடது புறம் இருந்த தகவல்கள் அங்கேயே மாறாமல் இருக்கும் . இது ஒரு அணுகூலம்.


மற்றபடி அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பேஸ்புக் போன்ற பக்கங்களை இப்படி வடி வடிவில் பார்க்கலாம்.


வரி வடிவம் என்பதால் குறிப்பிட்ட இணையதளம் துரிதமாக வந்து நிற்க வாய்ப்புள்ளது.


எது எப்படியோ, இணைய கட்டுரைகளை விளம்ப தொல்லை இல்லாமல் படிக்க விடும்பினால் அதற்கு இன்ஸ்டபேப்பர் போன்ற அருமையான தளங்கள் இருக்கின்றன.


இணையதள முகவ‌ரி; http://textmirror.net/

Friday, 2 January 2015

மசால் தோசை - சமையல்!






தேவையானவை:


தோசை மாவு - 2 கப் (மசால் செய்ய) பெரிய உருளைக்கிழங்கு - 3, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - கால் கப், சோம்பு - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை - 1 கப்.


துவையலுக்கு:


தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, உப்பு, இஞ்சி - ஒரு சுண்டைக்காய் அளவு, பூண்டு - 2 பல்.

செய்முறை:


 ஆலு வெந்தயக்கீரை தோசைக்கு சொன்ன மாதிரியே, தோசை மாவு தயார்செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையைப் பொடி செய்யவும். அடுத்ததாக, மசாலாவுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, சிறிது கட்டியும் தூளுமாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும்.


வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி சோம்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, 1 சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும். பின் உப்பு சேர்க்கவும். வெங்காயம் வெந்ததும், உதிர்த்த கிழங்கையும் சேர்த்து கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.


துவையலுக்கு கூறியுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் அரைத்தெடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை மெல்லிய தோசையாக ஊற்றி எண்ணெயை சுற்றிவர ஊற்றி மூடிவிடவும். தோசை வெந்ததும், அடுப்பை குறைந்த தணலில் வைத்து, ஸ்பூனால் துவையலை எடுத்து தோசை மேல் தடவவும். பின் பொட்டுக்கடலை மாவை தூவி, அதன் மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து மறு பாதி தோசையை மடக்கவும். சூடாக எடுத்து பரிமாறவும். சாப்பிட்ட எல்லோரும் ‘ஒன்ஸ்மோர்’ கேட்பார்கள்.

Thursday, 1 January 2015

வெல்ல தோசை - சமையல்!




தேவையானவை:


கோதுமை மாவு - 2 கப்,


வெல்லம் (பொடித்தது) - 1 கப்,


பச்சரிசி - கால் கப் (அல்லது பச்சரிசி மாவு - கால் கப்),


தேங்காய் (துருவியது) - கால் மூடி,


ஏலக்காய் - 4,


எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


 ஊறிய பச்சரிசியை ஆட்டி, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


வெல்லத்தை 1 கரண்டி நீர் சேர்த்து சூடு செய்து வடிகட்டிக் கொள்ளவும்.


 பின்னர் கோதுமை மாவு, வெல்ல நீர், தேங்காய் கலந்த பச்சரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து (வேண்டுமானால் தண்ணீர் விட்டுக் கொள்ளலாம்) தோசை மாவு பக்குவத்தில் கரைத்துக் கொள்ளவும்.


தோசைக் கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு வேகவைத்து எடுக்கவும். வித்தியாசமான இந்த கிராமத்து தோசை, சத்துமிக்கதும் கூட.

இது பேஸ்புக் உலகம:வியக்க வைக்கும் இணையதளம்

faces-of-facebook 

பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே பக்கத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? பேச‌ஸ் ஆப் பேஸ்புக் இணையதளம் இதை தான் செய்கிறது.பேஸ்புக்கின் 120 கோடியே சொச்சத்து உறுப்பினர்களையும் ஒரே இடத்தில் பட்டியலிட்டு காட்டுகிறது இந்த இணையதளம்.அதாவது பேஸ்புக் பயனாளிகள் ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்தியிருக்கிறது.


இந்த தளத்தில் நுழைந்ததும் அந்த கால டிவியில் தடங்களுக்கு வருதுகிறோம் அறிவிப்பின் போது தோன்றும் கருப்பு வெள்ளை புள்ளிகளாக காட்சி அளிக்கும்.ஆனால் தளத்தில் எந்த இடத்தில் கை (மவுஸ்) வைத்தாலும் அங்கு ஒரு எண்ணிக்கை தோன்றும்.அது அந்த புள்ளிக்கான பேஸ்புக் பயனாளியின் எண்ணிக்கை. மேலும் கிளிக் செய்தால் அந்த பேஸ்புக் பயனாளியின் புகைப்பட மற்றும் பேஸ்புக் அறிமுகத்தை பார்க்கலாம்.


இப்படியாக பேஸ்புக்கின் முதல் நண்பர் ( வேறு யார் அதன் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் ) உட்பட இப்போதைய புதிய உறுப்பினர்கள் வரை அனைவரது பேஸ்புக் அறிமுக விவர்த்தையும் இந்த ஒரு பக்கத்தில் காணலாம்.பேஸ்புக்கில் ஒருவர் இனைந்த நாளின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.பேஸ்புக்கில் இனையும் புதிய உறுப்பினர்களுக்கு ஈடு கொடுத்து இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.


இந்த பட்டியலில் உங்களையும் காணலாம். நீங்களும் உங்கள் நண்பர்களும் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என கண்டுபிடிப்பது சுவார்ஸ்யமான விளையாட்டாக இருக்கும்.


பேஸ்புக்கில் வெளிப்படையாக கிடைக்கும் தக்வல்கள் அடிப்படையிலேயே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதால் அந்தரங்க மீறல் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிற‌து.


எது எப்படியோ நீங்கள் பேஸ்புக் போன்ற தளத்தில் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் எவரும் உங்களை பார்க்கலாம் என்பது தானே உண்மை.


இந்த தளத்தை பாராட்ட தோன்றினால் அர்ஜன்டைனாவை சேர்ந்த நத்தாலியா ரோஜஸ் என்பவருக்கு ஒரு சபாஷ் போடலாம். அவர தான் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார்.


நத்தாலியா இதே போன்ற சின்ன சின்ன இணைய படைப்புகளை உருவாக்கும் இணைய கலைஞ‌ராக இருக்கிறார். மேலும் விவரங்களுக்கு அவரது இணைய பக்கம்.http://www.nataliarojas.com/ சரி பேஸ்புக்கில் நத்தாலியா இருக்கிறாரா?