Search This Blog

Monday, 16 December 2013

கனா காண்கிறேன் - கவிதை!





பல்லாங்குழி ஆடிய திண்ணை
 பாண்டி ஆடிய தெரு வீதி

 பட்டம் விட்ட மொட்டைமாடி
 பாடித் திரிந்த வயல் வெளி

துரத்திப் பிடித்த தும்பி
 பிடிக்காமல் விட்ட பட்டாம்பூச்சி

 கையில் ஏந்திய ஆட்டுக் குட்டி
 காத்துக் கிடந்த கனமழை

 விழுந்து விழுந்துக் கற்ற மிதிவண்டி
 விரட்டிச் சென்ற டயர் வண்டி

 திருடித் தின்ன மாங்காய் தோப்பு
 திட்டித் தீர்த்த காவல்காரன்

 அசைந்தாடிய ஆலமர ஊஞ்சல்
 ஆற்றைக் கடந்த பரிசல்

 அல்லி பூத்தக் குளம்
 அரசமரத் தடி பிள்ளையார்

 என அத்தனை நினைவுகளையும் சுமந்து சென்ற
 நெஞ்சம் தேடுது, எங்கே தொலைந்தது? நான் பார்த்த ஊர் என..

கனா காண்கிறேன்.....

No comments:

Post a Comment