Search This Blog

Tuesday, 26 November 2013

ஒரு சிகரெட் உங்களிடம் பேசுகிறது!

 

புகையிலைக்கு குட்பை ……

ஒரு சிகரெட் பேசுகிறது

வெளுத்த என் உடல் பார்க்க அழகுதான்,

ஆனால் என் உடல் முழுதும் விஷம்,

வெளியில் தெரியாத விஷ்ம்.

அணுஅணுவாக அழிப்பேன் உங்களை,

அதில் எனக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி,

நானும் ஒல்லி

என்னை நாடுபவனும் ஒல்லியாவான்,

என் நட்பைப் பெற.

நான் முதலில் இன்பத்தைக் கொடுத்து

ஏமாற்றுவேன்,

என் வசமாவான் அவன்.

நானில்லாமல் அவனில்லை

என்ற நிலை வந்ததும்

அவனை வதைக்க ஆரம்பிப்பேன்.

விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல்

என்னிடம் மாட்டுவார்கள்.

பின் தொலைந்தார்கள்,

புகை புகையாக வெளியே ஆனால்

உள்ளே புதைகிறார்கள் புகைக்குள்,

ஆனால் என்னிடம் ஒரு நல்லகுணம்.

முதலிலேயே.... என்னை நாடாதீர்கள்.

அபாயம்! என்று எச்சரிக்கை

விடுக்கிறேன்.

நல்லவனைக் காப்பாற்ற.

நுரையீரலைக் காப்பாற்ற,

அவனை சாவிலிருந்து காப்பாற்ற,

ஏன் எனக்கும் மனமுண்டே,

ஆனாலும் என் மேல் எல்லோருக்கும்

எத்தனை பாசம்

நூற்றி முப்பது கோடிகள்

என்னுடைய நண்பர்கள்.

ஒல்லியானாலும் எனக்கு எத்தனை வலிமை,

மனிதனே! உன் மன வலிமை விட

என் வலிமை பெரிதல்ல

விடுங்கள் என் நட்பை

பெறுங்கள் ஆரோக்கியத்தை.

No comments:

Post a Comment