அடுத்த தலைமுறை வலையமைப்பான 5 ஜி (5th Generation) தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக ஹுவாயி அறிவித்துள்ளது.
தற்போது சில நாடுகளில் மட்டுமே 4ஜி அதாவது 4 ஆம் தலைமுறை வலையமைப்பு பாவனையில் உள்ளது. சில நாடுகளில் பரீட்சாத்தமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 5ஜி தொழிநுட்ப ஆராய்ச்சிக்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 5ஜி வலையமைப்பானது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பாவனைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை தென்கொரிய நிறுவனமான செம்சுங் மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.
இதன்மூலம் இரண்டு கிலோமீற்றர் தொலைவினுள் , செக்கனுக்குள் 1 ஜிகா பைட் தரவுப் பரிமாற்ற வேகம் சாத்தியப்பட்டுள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டளவில் இத்தொழில்நுட்பம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படுமெனவும் செம்சுங் தெரிவித்திருந்தது.
இத்தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண திரைப்படங்கள், கேம்கள், அல்ட்ரா எச்.டிரியல் டைம் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை எவ்வித தங்கு தடையுமின்றி மேற்கொள்ள முடியுமென செம்சுங் சுட்டிக்காட்டியிருந்தது.
No comments:
Post a Comment