Search This Blog

Friday, 11 October 2013

நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை?


Considerations when using non stick tava?


நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது அதிகமான சூடு வைத்து பயன்படுத்த தேவையில்லை. குறைந்த மிதமான சூடு போதுமானது. சமைக்கும்  பொருட்கள் ஏதுமின்றி தீயின் மேல் நான்ஸ்டிக் பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால் நான்ஸ்டிக் பொருட்களில் பூசப்பட்ட  கோட்டிங் பாழாகிவிடும்.


நான்ஸடிக் பொருட்களை துடைக்கும் போது மென்மையான துணி அல்லது ஸ்பாஞ்ச் போன்றவற்றால் துடைத்தால் போதுமானது. உபயோகிக்கும்  முன்பும், பின்பும், பாத்திரத்தை கண்டிப்பாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும் போது சோப்புத்தூள் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.  கிளீனிங் பவுடர் பயன்படுத்தக்கூடாது.



கூர்மையான உலோகக் கரண்டி மற்றும் கத்தியை நான்ஸ்டிக் பாத்திரத்தில் பயன்படுத்தக்கூடாது. மரத்தினாலான கரண்டியோ அல்லது பிளாஸ்டிக்  கரண்டியோ பயன்படுத்துவது நல்லது. நான்ஸ்டிக் பாத்திரங்களை மற்ற பாத்திரங்களோடு உரசல் ஏற்படாமல் அதற்கென்று உள்ள ஆணியிலோ  அல்லது தகுந்த இடங்களிலோ மாட்டி பயன்படுத்த வேண்டும்.



பலமுறை உபயோகித்த பின்னர் சில காரணங்களால் பாத்திரத்தில் கறையோ அல்லது படிவமோ தென்படலாம். அச்சமயம் பாத்திரத்தின் பாதி  அளவிற்கு நீர் ஊற்றவும். அதில் ஒரு டீஸ்பூன் ப்ளீச்சிங்பவுடரை கலக்கவும். சிறிது வினிகர் ஊற்றவும் பிறகு மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள்  சூடேற்றவும். கொதிவரும் நிலையில் மரக்கரண்டி கொண்டு கறை போக அழுத்தமில்லாமல் தேய்த்தால் சுத்தமாகிவிடும். பின் சோப்பு நீரில் கழுவி  சிறிது எண்ணெய் தடவி பயன்படுத்தலாம்.  


No comments:

Post a Comment