இந்தியமொபைல் போன் தயாரிப்பாளரான, மைக்ரோமேக்ஸ் நிறுவனம், அண்மையில் தன் தயாரிப்புகளிலேயே, மிகப்பெரிய அளவிலான மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. கேன்வாஸ் டூடில் 2 (Canvas Doodle 2 ) என அழைக்கப்படும் இந்த போன் தான், இந்நிறுவனத்திலிருந்து அதிக விலையிடப்பட்டு வந்திருக்கும் போன் ஆகும். இதில் 5.7 அங்குல திரை தரப்பட்டுள்ளது. சாம்சங் காலக்ஸி நோட் 3 போனிலும் இதே அளவில் திரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Snapdeal வர்த்தக இணைய தளத்தில், தற்போதைக்கு இந்த போன் விற்பனைக்கு உள்ளது. இதன் விலை ரூ.19,900. இதற்கான விளம்பரத்தில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம், பேஸ்புக் தளத்தில், உங்கள் கற்பனை இதைக் காட்டிலும் பெரியதாக இருக்குமா? என்று கேட்டிருந்தது.
இதன் திரை டிஸ்பிளே ரெசல்யூசன் 1280 x 720 என உள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராச்சர், இந்த போனில் செயல்படுகிறது. இதன் ராம் மெமரி 1 ஜிபி ஆகவும்,ஸ்டோரேஜ் மெமரி 12 ஜிபிஆகவும் உள்ளது. ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதனை இயக்குகிறது. 12 எம்.பி. திறன் கொண்ட, டூயல் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த கேமரா செயல்படுகிறது. 2ஜி, 3ஜி மற்றும் வை-பி நெட்வொர்க் இணைப்புகள் கிடைக்கின்றன. இதன் 2,600 mAh திறன் கொண்ட பேட்டரி, தொடர்ந்து 8 மணி நேரம் பேச மின்சக்தியினை அளிக்கிறது.
இந்த ஆண்டில், 30 ஸ்மார்ட் போன் மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக, மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது. இதன் கேன்வாஸ் எச்.டி.மற்றும் கேன்வாஸ் 4 ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும், மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment