என்னென்ன தேவை?
மைதா மாவு - 1 லு கப் (ஆவியில் வேக வைத்தது),
ரவை - லு கப் (நெய்யில் வறுத்தது),
சர்க்கரை - 1 கப்,
பொடியாக நறுக்கிய முந்திரி,
திராட்சை - தலா 1 டேபிள் ஸ்பூன்,
துருவிய தேங்காய் 1/2 கப்,
ஏலக்காய் தூள்- சிறிது,
நெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?
மைதாமாவை ஒரு சுத்தமான துணியில் கட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக விட்டு எடுத்து, ஆறவிடவும். பின் 2 லு கப் தண்ணீரை கொதிக்க விட்டு அதில் ஒரு சிட்டிகை உப்பு, 2 டீஸ்பூன் நெய் விடவும். கொதிக்கும் தண்ணீரில் மைதாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும். இத்துடன் ரவையையும் தேங்காயையும் நன்கு சிவக்க வறுத்து, சர்க்கரை சேர்த்து வதக்கி சுருள எடுத்து வைத்துக் கொள்ளவும். இது பூரணம். கையில் நெய் தொட்டுக் கொண்டு மேல் மாவில் இருந்து (மைதா கலவையில்) ஒரு எலுமிச்சை அளவு எடுத்து விருப்பமான வடிவத்தில் கொழுக்கட்டை பிடித்து பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

No comments:
Post a Comment