பட்ஜெட் விலையிட்டு, புதியதாய் வந்த மொபைல் போன்களைப் பார்க்கையில், இரண்டு மொபைல் போன்கள் கண்களில் தட்டுப்பட்டன. இவை விற்பனைக்கு வந்து சில மாதங்கள் ஆனாலும், தற்போது பரவலாக, விருப்பப்பட்டு வாங்கப்படுகின்றன. அவை,
1. நோக்கியா 109
அதிக பட்ச விலை ரூ.1,899 என விலையிடப்பட்டாலும், சில கடைகளில், விலை குறைவாகவும் கிடைக்கிறது. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கும் இந்த மொபைல் போனில் ஒரு சிம் மட்டுமே பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 110 x 46 x 14.8 மிமீ ஆகும். எடை 77 கிராம். பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைல் போனில் ஆல்பா நியுமெரிக் எனப்படும் வழக்கமான கீ போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் திரையில் 1.8 அங்குல டிஸ்பிளே கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக்கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ராம் மெமரி 16 எம்.பி, சிஸ்டம் மெமரி 64 எம்.பி. உள்ளது. கேமரா இல்லை. எம்.பி. 3 பிளேயர் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ பதிவு செய்திடும் வசதியுடன் கிடைக்கிறது.
800 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. 7.8 மணி நேரம் வரை தொடர்ந்து பேசலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால், 790 மணி நேரம் தங்குகிறது.
2. ஸ்பைஸ் எம் 5030
அதிக பட்ச விலை ரூ. 1,149 என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் பயன்பாடு, இரண்டு பேண்ட் அலைவரிசை செயல்பாடு, பார் டைப் வடிவமைப்பு, 1.8 அங்குல திரை டிஸ்பிளே, லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், புளுடூத், யு.எஸ்.பி. போர்ட், 0.3 எம்பி திறன் கொண்ட கேமரா, வீடியோ பதிவு, எஸ்.எம்.எஸ். வசதி, 1,600 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி என இதன் சிறப்புக் கூறுகள் உள்ளன. பட்ஜெட் விலையில் போன் தேடுபவர்களுக்கு, இரண்டு சிம் இயக்கம் கொண்ட இந்த போன் உகந்ததாக உள்ளது.
No comments:
Post a Comment