Search This Blog

Friday, 13 September 2013

இளநரையும் அதைத் தவிர்க்க சில ஈசியான வழிகளும்!


பெரும்பாலும் வயதாகிவிட்டதை குறிக்கும் ஒரு இயற்கை செயல் தான் வெள்ளை முடி வருவது. அனைவருக்குமே ஒரு காலத்தில் நமது முடி நரைக்கும் என்பது தெரியும். ஆனால் அத்தகைய முடி 40 அல்லது 50-ல் தான் வெள்ளையாகும் என்று நினைப்போம். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு 20 வயதிலேயே முடியானது நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு கூந்தல் நரைப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அந்த காரணத்தை சரியாக தெரிந்து கொண்டால், இளமையிலேயே கூந்தல் நரைப்பதை தடுக்கலாம். இப்போது அந்த நரை முடி வருவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போமா!!!

அதற்கு முன்னதாக இந்த இளநரை தோன்றுவதற்கான சில காரணங்களை தெரிந்து கொள்வோமா?


sep 13 - lady ilaanarai

 

தவறான உணவுப்பழக்கங்கள் 

அனைத்துத் தாதுப்பொருள்களும் அடங்கிய ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொள்ளாதது கூட, உடல்நலத்துக்குக் கேடு விளைவித்து, அதன் காரணமாக தலைமுடிக்கும் கேடு விளைவிக்கலாம். ஏனெனில் தவறான உணவுப்பழக்கங்கள், உடலில் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகவும், சருமம், பல் மற்றும் தலைமுடியை மிக மோசமாகப் பாதிக்கும் காரணமாகவும் அமைகிறது.


வைட்டமின் பி12 குறைபாடு 


குறிப்பாக வைட்டமின் பி12 சத்துக் குறைபாடானது, இளநரையைத் தோற்றுவிக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. எனவே உணவில், போதுமான அளவு வைட்டமின் பி12 இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமை
தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பொதுவாக பெண்களுக்கு தான் தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்சனை பெண்கள் மத்தியில் சகஜமாகக் காணப்படுகிறது. எனவே அறிகுறிகளைக் கவனமாக கண்டுபிடித்து, தைராய்டு சோதனைகளைச் செய்து, இதற்கான மருத்துவத்தை உரிய நேரத்தில் மேற்கொண்டால், இளநரை மாறி முடி மீண்டும் கருமையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பிட்யூட்டரி சுரப்பிகளில் பிரச்சனை 

தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல் போவதற்கு, மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு காரணமாக அமையலாம். இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு 

சுற்றுப்புறச் சூழல் மாசு அடைதலால் சருமம் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலரும் அறிவோம். ஆனால் அதே சுற்றுச்சூழல் மாசு அடைவதால், நமது தலைமுடியும் பாதிக்கப்படுகிறது என்று நம்மில் பலருக்குத் தெரியாது. ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

தலைமுடிப் பராமரிப்புப் பொருட்கள் 

தலைமுடிப் பராமரிப்புப் பொருள்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், தலைமுடி இளமையிலேயே நரைக்கத் தொடங்கலாம். வண்ணச் சாயங்கள், தலைமுடி ப்ளீச்சிங் பொருள்கள், ஷாம்பூ மற்றும் கண்டிஷனர்கள் ஆகியவற்றில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு தலைமுடிக்குக் கேடு விளைவிக்கும். இப்பொருள்களை அதிகமாகத் தலைமுடிக்குப் பயன்படுத்துதல் கேடு. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை நினைவில் கொண்டு, தலைமுடியை அதிகமான வேதிப் பொருள்களுக்கு உட்படுத்தாமல், முடிந்தவரை அதன் இயற்கைத்தன்மை பாதிக்கப்படாமல் பராமரித்து வர வேண்டும்.

மன அழுத்தம் 

எப்போதும் வேலை வேலை என்று அலைபவரா? பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்திகு ஆட்படுபவரா? நெடுங்காலமாக மன அழுத்தத்துடன் வாழ்பவரா? அப்படியெனில் அதற்கு விலையாக தலைமுடியின் நலனை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, மன அழுத்தத்திலிருந்து விடுபடும் விதமாக, தேவையான மருத்துவத்தை மேற்கொண்டு, ரிலாக்ஸான வாழ்க்கை முறையை மேற்கொள்ள முயல வேண்டும்.


டூத் பேஸ்ட் 


பற்களை வெண்மையாக்கும் பொருள்களில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது இளநரையை உண்டாக்குகிறது. ஹைட்ரஜன் பெராக்ஸைடு அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொழுது, அது உடலில் உள்ள தலைமுடிக்கு நிறத்தை உண்டாகும் நொதிகள் மீது எதிர்மறை விளைவை உண்டாக்குகிறது. எனவே இதுமாதிரியான பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம், இவற்றால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து ஆலோசனை கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். தலைமுடி நரைப்பதற்கு இவை காரணமாக அமையுமா என்பது குறித்தும் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.


பரம்பரை 

இறுதியாக, இளநரைக்கு பரம்பரையும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நம்மால் தீர்வு ஏதும் சொல்ல முடியாது. பரம்பரையின் காரணமாக இளமையிலேயே தலைமுடி நரைத்தவர்கள் சிலர் நம்மிடையே உள்ளனர்.

ஆக இப்போதெல்லாம் இளம் வயது உள்ளவர்களுக்கும நரை முடி என்பது பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு கலரிங் பண்ணுவது நமக்கு நல்லது அல்ல. எத்தனையோ கலரிங் வந்தாலும் கூட உண்மையான கருப்பு நிறத்திற்கு இருக்கும் மதிப்பே தனி என்று தான் சொல்ல வேண்டும்..

* நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும்.குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தேங்காய் எண்ணையை நன்கு தலையில் தேய்த்து மஜாஜ் செய்ய வேண்டும். பின்னர் தலையை தேய்த்து குளிக்க வேண்டும்..இவ்விதம் செய்தால் நல்ல அடர்தியான முடியுடன் கரு நிற கூந்தலையும் பெற முடியும்.

* தலைக்கு குளித்த சில நிமிட நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவுதல் கூடாது.. தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. அதோடு முடு அதிகம் கொட்டவும் செய்கிறது..

* முளைக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் நரை முடி கருப்பாக மாறும்.

* முருங்கைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் முடி உதிர்வது நிற்கும். முடி நீண்டுவளரும். நரை முடி அகலும். முருங்கைகீரையில் இரும்புச் சத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாக உள்ளது.

இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விடயம். ஆனால் தெரியாத விடயம் ஒன்று உள்ளது. அதாவது, நரை முடி வந்தவர்களும், உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி மறைந்து விடும்.

No comments:

Post a Comment