நெஸ்ட்ளே நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் என்ற புதிய வெர்ஷன் ஒஎஸ்களை வெளியிட்டது. ஆன்டிராயட் 4.4 கிட் காட் அக்டோபரில் வெளிவரும் என்று நெஸ்ட்ளே நிறுவனம் அறிவித்துள்ளது. ஆன்டிராய்ட் நிறுவனத்தை கூகுள் வாங்கிய பிறகு பல புதிய வெர்ஷன் ஒஎஸ்களை வெளியிட்டது.
அண்மையில் ஆன்டிராய்ட் நிறுவனம் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டது. ஆன்டிராய்டின் அடுத்த வெர்ஷன் ஓஎஸ் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் என்று கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. நெஸ்ட்ளே(nestle) நிறுவனத்துடன் கூகுள் இணைந்து ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் மொபைல் ஓஎஸ்யை வெளியிட உள்ளது என்பது தெரிந்ததே. கூகுளின் அடுத்த நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன்டிராய்ட் 4.4 கிட் காட் ஓஎஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Android 4.4 KitKat வெண்ணிலா User Interface, புதிய அனிமேஷன்கள், Visual tweaks, புதிய அறிவிப்பு விட்ஜெட்கள் ஆகியவை மறு வடிவமைக்கப்பட்டு வரும் மற்றும் முன்பிருந்த அண்ட்ராய்டு நீல நிறத்தை மாற்றி பல்வேறு வண்ண விருப்பங்களில் வரும் என்று கூகுள் நிறுவனம் கூறுகின்றது.
No comments:
Post a Comment