QR Code என்றால் என்ன?
QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும். இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலக நாட்டினர் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாகும்.
Bard code & QR code
Bar Code பற்றிய நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து வைத்திருப்போம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியே QR Code ஆகும்.
QR Code-ம் பயனும்:
- QR Code Image ஆக மாற்றுவதன் மூலம் உங்களுடைய தகவல்கள் அல்லது இணைப்புகள் உங்களுடைய தகவல்கள் QR Code ஆக என்கோட் (Encode) செய்யப்பட்டு ஒரு படமாக கிடைக்கும்.
- அப்படத்தை உங்களுக்கு வேண்டிய இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
- நண்பர்களுக்கு அனுப்பியும் அவற்றை Decode செய்து பயன்படுத்த முடியும்.
- அதாவது ஒரு தகவலை QR Code ஆக என்கோட் செய்யப்பட்டு கிடைக்கும் படத்தை மீண்டும் ஸ்கேன் செய்து (டீகோட் Decode)செய்து , அதில் மறைந்துள்ள தகவல்களைப் பெற முடியும்.
- உங்களுடைய தகவல்கள் தமிழ்மொழி உட்பட எம்மொழியில் இருந்தாலும், இந்த முறையில் தகவல்களை QR Code ஆக மாற்றி, மீண்டும் தேவையானபோது Decode செய்து பெற முடியும்.
QR Code Image - ல் என்னென்ன தகவல்களைப் பயன்படுத்த முடியும்.?
QR Code -ல் இணையதளச்சுட்டிகளை (Websites links) வைக்கலாம். குறுஞ்செய்திகளை QR Code ஆக மாற்றலாம். மின்னஞ்சல் முகவரிகள், வலைத்தள முகவரிகள், SMS என்பன போன்ற ஐந்து வரிக்கு மிகாமல் இருக்கும் Data க்களை QR Code படமாக மாற்ற முடியும்.
QR Code Image - ஐ உருவாக்குவது எப்படி?
QR Code Image -ஐ உருவாக்குவதற்கு இணையத்தில் நிறைய இணையதளங்கள் (Online QR Code Websites) உள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு தளத்திற்கு சென்று நீங்கள் உருவாக்க விருக்கும் இணைப்பு அல்லது தகவல்களை அதில் உள்ளிட்டு, QR Code Image - இமேஜைப் பெற முடியும். இது முற்றிலும் இலவசமே..
QR Code Image உருவாக்க இலவச மென்பொருள்களும் உள்ளன. அம்மென்பொருளைப் பயன்படுத்தியும் QR Code Image ஐ உருவாக்கம், QR Code Image -ல் உள்ளதை Decode செய்து படிக்கவும் முடியும்.
QR Code உருவாக்கப் பயன்படும் மென்பொருள்:
1. Download QR Code Generator Software
2. Download QR Code Generator Software
3. Download QR Code Generator Software
உடனடியாக Online-ல் QR Code உருவாக்கப் பயன்படும் இணையதளங்கள்:
1. http://createqrcode.appspot.com/
2. http://keremerkan.net/qr-code-and-2d-code-generator/
இதுபோன்று நிறைய இணையத்தளங்கள் உள்ளன.
உருவாக்கப்பட்ட QR Code - ஐ Decode செய்து தகவலைப் படிப்பது எப்படி?
இதற்கு QR Code Reader என்ற மென்பொருள் பயன்படுகிறது. இணையத்தில் QR Code Reader வலைத்தளங்களும் உள்ளன.
இந்த தளத்திற்குச் சென்று http://www.onbarcode.com/scanner/qrcode.html உங்களுடைய QR Code Image - உள்ளிட்டு, அதில் உள்ள தகவல்களைப் பெற முடியும்.
QR Code Reader மென்பொருள் (Software) மூலமும் QR Code Image உள்ளவற்றை படித்து அவற்றைப் பயன்படுத்த முடியும்.
இம்மென்பொருளைப் பயன்படுத்தி QR Code உருவாக்க முடியும். உருவாக்கிய QR Code Image - படிக்கவும் முடியும்.
விண்டோஸ் கணினிக்கான மென்பொருள் இது. மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய.. இங்கு செல்லவும்.
No comments:
Post a Comment