சில முக்கிய நகல்களை நாம் அவசரமாக அனுப்ப பேக்ஸ் மூலம் அனுப்புவோம். இதற்க்கு பணம் கொடுத்து தான் அனுப்ப வேண்டும். இலவசமாக அனுப்ப வேண்டுமென்றால் அந்த இயந்திரத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஆனால் இந்த குறைகளை தவிர்க்க ஆன்லைனில் இலவசமாக அனுப்பலாம். இதற்க்கு பத்து சிறந்த தளங்களை கீழே வரிசை படுத்தி உள்ளேன்.
1. eFax
2. Super Fax
இந்த தளம் இந்திய அளவில் மிக பிரபலமான தளம். உங்கள் ஈமெயிலை இதன் மூலம் பேக்ஸ் அனுப்பலாம். இந்த தளத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே இலவசமாக பேக்ஸ் அனுப்ப முடியும். சுமார் 10 முறை பேக்ஸ் அனுப்பலாம்.
3. Faxmyway
1. eFax
இந்த தளத்தில் 30 நாட்களுக்கு சுமார் 180 பக்கங்களை இலவசமாக பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இந்த தளம் சுமார் 15 வருடங்களாக இந்த சேவையை வழங்கி வருகிறது. உலகளவில் 49 நாடுகளில் இந்த சேவை உள்ளது. 30 நாட்களுக்கு பிறகு மாத கட்டணத்தை வசூலிப்பார்கள்.
2. Super Fax
இந்த தளம் இந்திய அளவில் மிக பிரபலமான தளம். உங்கள் ஈமெயிலை இதன் மூலம் பேக்ஸ் அனுப்பலாம். இந்த தளத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே இலவசமாக பேக்ஸ் அனுப்ப முடியும். சுமார் 10 முறை பேக்ஸ் அனுப்பலாம்.
3. Faxmyway
இந்த தளத்தில் 5 நாட்களுக்கு இலவசமாக பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதுவும் ஒரு இந்திய நிறுவனமாகும். ஒரே நேரத்தில் பல பேருக்கு பேக்ஸ் அனுப்பும் வசதி இந்த தளத்தில் உள்ளது.
இது முழுக்க முழுக்க இலவச சேவையாகும். இதில் பேக்ஸ் அனுப்ப மட்டுமே முடியும், பெற முடியாது. உலகளவில் இலவசமாக இந்த தளம் மூலம் இலவசமாக பேக்ஸ் அனுப்ப இயலும்.
5. Speed Fax
இதில் இலவசமாக மூன்று நாட்களுக்கு பேக்ஸ் அனுப்பியும் பெற்றும் கொள்ளலாம். இது ஒரு இந்திய நிறுவனமாகும். மூன்று நாட்களுக்கு பிறகு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கான தொகையை கட்டினால் இந்த வசதியை தொடர்ந்து பெறலாம்.
6. Sendfreefax
இந்தியர்களுக்கென்று பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட தளமாகும். இதில் இந்திய அளவில் இலவசமாக கணக்கில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாக பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதில் பேக்ஸ் அனுப்புவது மிகவும் சுலபமாக இருக்கும்.
7. Pop fax
20 நாடுகளில் 500 நகரங்களில் இந்த வசதி செயல்படுகிறது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் உங்கள் மொபைலில் இருந்து கூட பேக்ஸ் அனுப்பி கொள்ளலாம். இதுவும் உலகளவில் மிக பிரபலமான தளமாகும்.
8. faxzero
இதுவும் ஒரு இலவச சேவையாகும். இதில் கட்டண வசதியும் உள்ளது. இலவச சேவையில் தினமும் 2 பேக்ஸ் தான் அனுப்ப முடியும். மற்றும் இலவச சேவையில் நீங்கள் பேக்ஸ் அனுப்பினால் இந்த தளத்தின் லோகோ வாட்டர் மார்க்காக தெரியும். கட்டண வசதியில் இந்த பிரச்சினைகள் இல்லை.
9. Hello Fax
இந்த தளத்தில் பேக்ஸ் அனுப்பும் டாகுமெண்ட்டை எடிட் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இந்த சேவை 30 நாட்கள் வரை செய்து கொள்ளலாம்.
10. Ring Central
இது உலகளவில் மிக பிரபலமான தளமாகும். இந்த தளத்தில் உங்கள் மொபைலில் இருந்து பேக்ஸ் அனுப்பலாம் உங்களுக்கு வரும் பேக்சை மொபைல் மூலம் பெறலாம். பிளாக்பெரி,ஐபோன் போன்றவைகளுக்கு மென்பொருள் இந்த தளத்தில் இருந்து தரவிறக்கி டவுன்லோட் செய்து கொண்டு இந்த வசதியை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment