குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"
அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார்.
அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்” என்று குயவரிடம் கேட்டார்.
“நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்” என்றார்.
“அப்படியா” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளை யெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.
பதறி போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார்.
அதற்கு “உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்” என்றார் வந்தவர்.
“நான் செய்த பானைகளை என் முன்னால் போட்டு உடைத்தால் எனக்குச் சந்தோஷம் வருமா?” என்றார் கோபமாக.
" நீ மட்டும் இறைவனின் படைப்பை அவர் முன்னால் கொன்றால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என நினைக்கிறாயே "
குயவருக்கு புரிந்தது.....
No comments:
Post a Comment