Search This Blog

Wednesday, 31 December 2014

முருங்கைப்பூ சாதம்!

  Murunkaippuvai parse well. In a pan add oil, mustard talittu, and add small onions.

என்னென்ன தேவை?

முருங்கைப்பூ - 2 கப்,

சின்ன வெங்காயம் - 50 கிராம்,


கடுகு - 1 டீஸ்பூன்,

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்,

தேங்காய்த் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

வடித்த சாதம் - 2 கப்,

மஞ்சள் தூள் - சிறிது,

உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

முருங்கைப்பூவை நன்கு அலசவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.

 நன்கு வதங்கியதும்  மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு, முருங்கைப்பூ எல்லாவற்றையும் போட்டு நன்கு கிளறவும்.

கடைசியாக தேங்காய்த் துருவல் போட்டு இறக்கவும்.  இதை வடித்த சாதத்துடன் சேர்த்துக் கிளறி இறக்கவும். கண்கள் குளிச்சி பெறும்.

Friday, 19 December 2014

சத்தான மாவிலே அத்தனையும் செய்யலாம் செம ருசியாக!

சத்துமாவு தயார் செய்ய… 


தானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற வகை பதார்த்தங்கள் செய்ய மு.பருப்பு, பா.பருப்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டியதில்லை.

1. சத்துமாவு கஞ்சி 



என்னென்ன தேவை?

சத்துமாவு, பனங்கற்கண்டு அல்லது வெல்லம், பால்.
எப்படிச் செய்வது?

சத்துமாவில், தூசி நீக்கிய வெல்லம் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து, மாவு அளவில் 4 மடங்கு நீர் சேர்த்துக் கிளறவும். நீர்க்க இருந்தது கஞ்சி போல கெட்டியாகும் போது, தேவையான பால் விட்டு லேசாக கிளறி இறக்கவும். ஹார்லிக்ஸ் போல சூடாகக் குடிக்கலாம்.

* கூல் கஞ்சி: ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைத்தும் கூல் கஞ்சியாக ஸ்பூனில் எடுத்தும் சாப்பிடலாம்!

2. சத்துமாவு உருண்டை 

என்னென்ன தேவை?

சத்துமாவு, வெல்லம், நெய் அல்லது நல்லெண்ணெய், ஏலக்காய் தூள் சிறிது.
எப்படிச் செய்வது?

இதை அடுப்பில் வைக்க வேண்டியதில்லை. மாவை வறுத்து அரைத்திருப்பதால் அப்படியே சாப்பிடலாம். பச்சை வாடை தெரியாது.
வெல்லத்தில் நீர்விட்டு தூசு எடுத்துவிட்டு சத்து மாவு, ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

3. புட்டு

என்னென்ன தேவை?

சத்துமாவு, தேய்காய்த் துருவல், லேசாக வறுத்த வெள்ளை எள்.
எப்படிச் செய்வது?

சிறிது வெந்நீரை லேசாக மாவில் தெளித்து உதிரியாக பிசறிக்கொள்ளவும். வெள்ளை எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் வெந்நீர் விட்டு உதிரியாகப் பிசைந்து வைத்த மாவை வைக்கவும். தேங்காய்த் துருவலையும், வறுத்த எள்ளையும் மாவின் மேல் போட்டு வேக வைக்கவும்.

Thursday, 4 December 2014

அற்புதமான இணையதளங்கள்! உங்களுக்கு இதோ!



தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.


இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.


ஒன்லைன் மூலம் பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.


ஒரு சில விடயங்களை நீங்கள் ஒன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.


* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களா www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.


போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.


* நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.


* எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள் www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.


* சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.


* ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.


* உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள் www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.


* நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.